india

img

இந்தியாவில் ஒரே நாளில் 3,32,730 பேருக்கு கொரோனா

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 32,32,730 பேருக்கு கெரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
இந்தியாவில் கொரோனா தொற்றின் 2வது அலை தீவிரமடைந்துள்ளது. இதையடுத்து தில்லி, உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்களில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு இதனால் நோயாளிகள் உயிரிக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று காலை கொரோனா தொற்று விபரங்கள் குறித்து மத்திய சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி  இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,32,730 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,62,63,695 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், தொற்று பாதிப்பால் ஒரே நாளில் 2,263பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து கொரோனா பாதிப்பால்  உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1,86,920 ஆக உயர்ந்துள்ளது. 
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 1,93,279 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,36,48,159 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா தொற்றுக்கு தற்போது 24,28,616 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் இதுவரை 13,54,78,420 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இந்தியாவில் இதுவரை 27 கோடியே 44 லட்சத்து 45 ஆயிரத்து 653 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், 17 லட்சத்து 40 ஆயிரத்து 550 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன''. என ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. 

;