india

img

இந்தியாவில் மேலும் 1.20 லட்சம் பேருக்கு கொரோனா

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 1.20 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
இந்தியாவில் கொரோனா வைரசின் 2-வது அலை உச்சமடைந்திருந்த நிலையில் தற்போது படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது. 
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்த நிலையில் நாடு முழுவதும் ஆக்ஸிஜன் உள்ளிட்ட மருத்து உபகரணங்களின் தட்டுப்பாட்டால் பலர் உயிரிழந்தனர்.   இந்நிலையில், இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நிலவரம் குறித்து  இன்று காலை மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,20,529 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு 2,86,94,879 ஆக உயர்ந்துள்ளது.
நாடு முழுவதும் ஒரே நாளில் 3,380 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதையடுத்து கொரோனா வைரசால் இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,44,082 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,67,95,549 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 1,97,894 பேர் குணமடைந்துள்ளனர்.
நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 15,55,248 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். நாடு முழுவதும் நேற்று வரை பொதுமக்களுக்கு 22,78,60,317 டோஸ்கள் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

;