india

img

விளையாட்டு வீரர்களுக்கு கான்ஸ்டபிள் வேலை

இந்திய - திபெத் எல்லைக் காவல்படையில் (ITBP) விளையாட்டு வீரர்களுக்கு கான்ஸ்டபிள் பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதன் விவரம்;
பணி : கான்ஸ்டபிள்
காலியிடங்கள் : 65

கல்வி தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் காலியிடம் ஏற்பட்டுள்ள விளையாட்டு பிரிவுகள் சர்வதேச, தேசிய, மாநில அளவிலான போட்டிகளில் பங்கு பெற்று விளையாடி இருக்க வேண்டும்.

வயது வரம்பு : 18 முதல் 28க்குள் இருக்க வேண்டும்

சம்பளம் : மாதம் ரூ.21,700 - 69,100

தேர்வு செய்யப்படும் முறை: காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள சம்மந்தப்பட்ட விளையாட்டில் பெற்றிருக்கும் சாதனைகள், உடற்தகுதி, மருத்துவ தகுதி மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்களுக்கு மின்னஞ்சல் மூலம் சேர்க்கை கார்டு அனுப்பி வைக்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்:ரூ.100. கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும். அனைத்து பிரிவையும் சேர்ந்த பெண்கள் மற்றும் எஸ்சி, எஸ்டி பிரிவை சேர்ந்தவர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை:www.recruitment.itbpolice.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க இறுதி தேதி : 02.09.2021

;