india

img

மத்திய அரசு தன் பொறுப்பைத் தட்டிக்கழிக்கக் கூடாது.... மக்கள் சுகாதார இயக்கம் அறிக்கை.....

புதுதில்லி:
மத்திய அரசாங்கம் தன் பொறுப்பைத் தட்டிக்கழிப்பது அதிகரித்துக் கொண்டிருப்ப தாகவும், இதனைத் தவிர்த்து அது பொதுசுகாதாரத்திற்கான செலவினத்தை அதிகரித்திட வேண்டும் என்றும் மக்கள் சுகாதார இயக்கம் (ஜன் ஸ்வஸ்த்யா அபியான்) என்னும்அமைப்பு கோரியுள்ளது.

இது தொடர்பாக அந்த இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

நாட்டில் கொரோனா பெருந்தொற்று நெருக்கடி அதிகரித்துக் கொண்டிருக்கக் கூடிய நிலையில் அதனைக் கட்டுப்படுத்த வேண்டிய அரசாங்கம் அதனை மேற்கொள்ளாமலும், அதற்காகப் பொது சுகாதார செலவினங்களை அதிகரித்திடாமலும், தேவையான அளவிற்குத் தடுப்பூசிகளை அதிகரித்திடாமலும் தன் பொறுப்பைத் தட்டிக் கழித்துக் கொண்டிருக்கிறது.மத்திய அரசாங்கம், கொரோனா வைரஸ்தொற்றின் இரண்டாவது அலையை எதிர்கொள்ள எந்த நடவடிக்கையும் எடுக்காது தோல்வி அடைந்துவிட்டது. கொரோனா 2-வது அலையை பல நாடுகள் எதிர்பார்த்து உரிய நடவடிக்கைகள் எடுத்துள்ளபோதிலும், இந்திய அரசு அவ்வாறு இதனை எதிர்கொண்டு முறியடித்திட, தயாரிப்பு வேலைகள்எதையும் செய்திடவில்லை.இதனை எதிர்த்து முறியடித்திட வேண்டுமானால் அதற்கு பொது சுகாதார அமைப்பின் உள்கட்டமைப்பு வசதிகளையும், மனித வள ஆற்றலையும் விரிவாக்கிட வேண்டும். இவற்றைச் செய்வதற்கு, பொது சுகாதாரத் திட்டங்களுக்கான செலவினங்களை “பாய்ச்சல் வேகத்தில்” அதிகரித்திட வேண்டும். ஆனால் இதில் எதையும் செய்ய மறுப்பதோடு மட்டுமல்லாமல், இருக்கின்ற அரசாங்க மருத்துவமனைகளையும் தனியாரிடம் ஒப்படைத்திட முடிவுகள் எடுத்திருக்கிறது. இதையும், சுகாதார இன்சூரன்ஸ் திட்டங்களையும் மத்திய அரசு மறு ஆய்வுக்கு உட்படுத்திட வேண்டும்.

மேலும் தனியார் மருத்துவமனைகள், தாங்கள் அளித்திடும் சேவைகளுக்கான கட்டண விகிதங்களையும், அவற்றின் தரத்தையும், அவை சிகிச்சை அளித்திடும் முறைகளையும், அம்மருத்துவமனைகளில் நோயாளிகளின் உரிமைகளையும் முறைப்படுத்திடவும் அரசாங்கம் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.மேலும், கொரோனா வைரஸ் பெருந்தொற்று சம்பந்தமான அனைத்து மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் மீதும் விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரியையும் தள்ளுபடி செய்திட வேண்டும். நாட்டில் அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்கக் கூடிய விதத்தில் அதன் விநியோகத்தை அதிகரித்திடவேண்டும். அனைவருக்கும் சமமான அளவில் அவை விநியோகிக்கப்பட வேண்டும்.இவ்வாறு மக்கள் சுகாதார இயக்கம் கோரியுள்ளது.          (ந.நி.)

;