india

ஜனார்த்தன ரெட்டியை மீண்டும் இழுக்க பாஜக முயற்சி

பாஜகவுக்கு மிக நெருக்கமானவரும், பிரபல சுரங்க தொழிலதிபருமான ஜனார்த்தன ரெட்டி  2023 சட்டமன்ற தேர்தலில் கல்யாண ராஜ்ய பிரகதி பக்ஷா (கேஆர்பிபி) கட்சியை ஆரம்  பித்து வடகிழக்கு கர்நாடகாவின் பெரும்பாலான (42) தொகுதிகளில் தனித்து போட்டியிட்டு, தான்  போட்டியிட்ட கங்காவதி தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றார். 12-க்கும் மேற்பட்ட தொகுதி களில் பாஜகவிற்கு நிகரான வாக்குகளை அள்ளி குவித்தது ஜனார்த்தன ரெட்டியின் கேஆர்பிபி  கட்சி. வரவிருக்கும் மக்களவைத் தேர்தலிலும் ஜனார்த்தன ரெட்டியின் கேஆர்பிபி கட்சி 10-க்கும் மேற்பட்ட மக்களவை தொகுதிகளில் ஆதிக்கம் செலுத்த வாய்ப்புள்ளதாக கருத்துக்கணிப்பில் தக வல் வெளியானது. இதனால் ஜனார்த்தன ரெட்டியை வலுவாக எதிர்த்து வரும் காங்கிரசின் பரத்  ரெட்டி மீது அமலாக்கத்துறையை ஏவி அவருக்கு நெருக்கடி அளித்து, இதன்மூலம் ஜனார்த்தன ரெட்டியின் கேஆர்பிபி கட்சியை தேசிய ஜனநாயக கூட்டணிக்குள் இழுக்கவே சோதனை நடத்தப்  பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.