india

பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் வேளாண் சட்டங்கள் விவாதிக்கப்படுகின்றன

இந்திய வேளாண் சட்டங்கள், பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் வரும் மார்ச் 8 அன்று விவாதிக்கப்படுகின்றன. இந்த விவாதங்கள் புகழ்பெற்ற வெஸ்ட்மின்ஸ்டர் கூடத்தில் நடைபெறுகின்றன.

இந்த விவரங்கள் போராடும் விவசாயிகள் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றன.

இந்தியாவில் நிறைவேற்றப்பட்டுள்ள வேளாண் சட்டங்கள் விவசாயத் துறைக்கு உதவுவதைக் குறிக்கோளாகக் கொண்டு, கொண்டுவரப்பட்ட “சீர்திருத்தச் சட்டம்” என்று மத்திய அயல் துறை அமைச்சகம் வக்காலத்து வாங்கிய ஒரு மாத காலத்திற்குப்பின்னர் இவ்வாறு விவாதம் நடைபெற இருக்கிறது.

“இந்த விவாதம் பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தின் ‘ஹவுஸ் ஆப் காமன்ஸ்’ (மக்களவை)-க்கு அடுத்து இரண்டாவதாகத் திகழும் வெஸ்ட்மின்ஸ்டர் கூடத்தில் திங்கள் கிழமை மாலை 4.30 மணியளவில் நடைபெற இருக்கிறது. மனுக்கள் குழுவின் உறுப்பினர் ஒருவர் விவாதத்தைத் தொடங்கி வைத்திட, அவரைத் தொடர்ந்து முன்னணி எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும், ஓர் அமைச்சரும் இந்த விவாதத்தில் பங்கேற்கிறார்கள்,” என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.  

(ந.நி.)

ReplyReply allForward

;