மத்திய பல்கலைக் கழகங்களில் அனுமதிக்கப்பட்ட ஆசிரியர் 18,940 பணியிடங்களில், 5,060 இடங்கள் காலியாக உள்ளன. இது 26.72% ஆகும். ஆசிரியர் அல்லாத 35,640 பணியிடங்களில் 16,719 இடங்கள் காலியாக உள்ளன. இது 47% ஆகும். உயர்கல்வி துறையில் சிறப்பு ஆட் சேர்ப்பு நடத்தப்படுகிறது என ஒன்றிய அரசின் கூற்றின் வெற்றுத் தன்மை இந்த புள்ளிவிபரம் அம்பலப்படுத்தியுள்ளது.