india

img

அதானி, பாலியல் குற்றவாளி பிரிஜ் பூஷன், விஜய் மல்லையா ஆகியோர் தான் மோடி குடும்பம்

தமிழ்நாடு உள்ளிட்ட எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் அரசியல் ஆதாயமாக விமர்சிக்க குற்றச்சாட்டு கள் எதுவும் இல்லாத காரணத்தினால் பிர தமர் மோடி குடும்ப அரசியலால் ஆளும்  மாநில அரசு சிக்கித் தவிக்கிறது என்று எதை யாவது கூறுவார். 

இதை குறிப்பிட்டு ராஷ்டிரிய ஜனதா தள மூத்த தலைவரும், பீகார் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் கடந்த வாரம்  பாட்னாவில் நடைபெற்ற மக்கள் நம் பிக்கை யாத்திரையில்,”ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் மீது  பிரதமர் மோடி குடும்ப அரசியல் குற்றச்  சாட்டை எழுப்பி வருகிறார். பிரதமர் மோடிக்கு குழந்தைகளோ, குடும்பமோ ஏன் இல்லை என்பதை அவர் சொல்ல  வேண்டும்? பல குடும்பங்கள் அரசியலில் இருந்தால் அது குடும்ப ஆட்சியா? அது  வாரிசு அரசியலா? உங்களுக்கு (மோடிக்கு) குடும்பம் இல்லையென்றால் யார் என்ன செய்ய இயலும்?” என பேசினார். 

இதனை அரசியல் ஆதாயப் பொரு ளாக திரித்து மோடிக்கு குடும்பம் இல்லை என்று லாலு பிரசாத் கூறியதாகவும், அவ ருக்கு குடும்பமாக நாங்கள் இருப்பதாக கூறி ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்  ஷா, பாஜக தலைவர் ஜே.பி.நட்டா உள்  ளிட்ட பாஜகவினர் டுவிட்டர் எக்ஸ் சமூக வலைதளங்களில் தங்களது பெயரோடு “மோடியின் குடும்பம் - Modi ka parivar”  என பதிவிட்டனர்.  

இந்நிலையில், தில்லி நகரம் முழுவதும்  பிரதமர் மோடியின் உதவியின் மூலமும், பங்குச்சந்தை மோசடி மூலமும் உலகின்  முக்கிய பணக்காரராக உள்ள அதானி,  பணத்தை பெற்றுக்கொண்டு அதனை செலுத்தாமல் நாட்டை விட்டு தப்பியோடிய  தொழிலதிபர்கள் நீரவ் மோடி, விஜய் மல்லையா, மல்யுத்த வீராங்கனைகளை பாலியல் வன்கொடுமை செய்த பாஜக எம்பி பிரிஜ் பூஷன் சரண் சிங் உள்ளிட்ட 13 பேரின் புகைப்படத்தை சுற்றி வைத்து  இவர்கள் தான் “மோடியின் உண்மையான  குடும்பம் (மோடி கா அஸ்லி பரிவார்)” என்று  கூறி, நடுவில் பிரதமர் மோடி படத்துடன் காங்கிரஸ் இளைஞரணி போஸ்டர் அடித்து  ஒட்டியுள்ளது.  இந்த போஸ்டர் தில்லி நகரம் மட்டு மின்றி சமூகவலைத்தளங்களிலும் டிரெண்ட் ஆகி வருவது பாஜக வினரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.