india

img

தில்லி போராட்டத்தில் இதுவரை 60 விவசாயிகள் உயிரிழப்பு! 

புதுதில்லி, ஜன. 4-
தில்லி போராட்டத்தில் விவசாயிகளின் உயிரிழப்பு 60 ஆக அதிகரித்துள்ளது.
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லி எல்லைகளில் விவசாயிகளின் போராட்டம் 40ஆவது நாளாக நடைபெற்று வருகிறது. 
தில்லியில், மழையிலும், கடும் குளிரிலும் அவர்கள் போராட்டத்தைத் தொடர்ந்துவருகின்றனர்.
இன்று 7 ஆவது கட்ட பேச்சு வார்த்தை நடைபெற்ற நிலையிலும், உடன்பாடு எட்டப்படவில்லை.
இதற்கிடையே தில்லியில் கடுமையான குளிர், மழை நிலவுவதால் பல விவசாயிகள் உயிரிழந்து வருகின்றனர். சில விவசாயிகள் தற்கொலையும் செய்துகொண்டுள்ளனர்.
தற்போது வரை போராட்டத்தில் 60 விவசாயிகள் உயிரிழந்துள்ளதாக பாரதிய கிசான் யூனியன் (பி.கே.யூ) செய்தித் தொடர்பாளர் ராகேஷ் திகாயத் தெரிவித்தார்.
மேலும், விவசாயிகளின் உயிரிழப்புக்கு பதில் வழங்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பு என்றும் அவர் கூறினார்.

;