india

img

உலகின் மிகவும் மாசடைந்த 30 நகரங்களில் 22 இந்திய நகரங்கள்!- புதிய ஆய்வறிக்கையில் தகவல்

உலகின் மிக மாசுபட்ட 30 நகரங்களில் இந்தியாவில் மட்டும் 20 நகரங்கள் உள்ளன என்று ஒரு புதிய ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. 

சுவிட்சர்லாந்தை சேர்ந்த, ஐ.கியு. ஏர் என்ற நிறுவனம், 2019 - 20ஆம் ஆண்டில், உலகளவில் காற்றின் தரம் பற்றி ஆய்வு மேற்கொண்டு, அறிக்கை வெளியிட்டுள்ளது.
106 நாடுகளின் PM2.5 தரவை அடிப்படையாகக் கொண்ட அந்த அறிக்கையில், மிகவும் மாசுபட்ட நகரங்களின் தரவரிசையில் இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. 
உலகளவில் மிகவும் மாசுபட்ட முதல் 30 நகரங்களில் இந்தியாவில் மட்டும் 22 நகரங்கள் உள்ளன. அதில் தலைநகர் தில்லி முதலிடத்தில் உள்ளது.
தலைநகர் தில்லியின் காற்றின் தரம், 2019 - 20ஆம் ஆண்டில் 15 சதவீதம் அதிகரித்திருந்தாலும், சர்வதேச அளவில் மிகவும் மாசடைந்ததால் தில்லி முதலிடத்தில் உள்ளது.
போக்குவரத்து, சமையல் புகை, மின்சார உற்பத்தி, தொழில், கட்டுமானம், கழிவுகளை எரித்தல் மற்றும் வேளாண் கழிவுகளை எரித்தல் முதலியவை இந்தியாவின் காற்று மாசுபாட்டின் முக்கியக் காரணிகளாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. குறிப்பாக, போக்குவரத்து புகை முக்கிய பங்களிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

;