india

img

தீக்கதிர் விரைவுச் செய்திகள்....

நடிகை கங்கனா ரணாவத் உருவபொம் எரிப்பு!

இந்திய விவசாயிகள் போராட்டம் பற்றி ஏன் நாம்பேசவில்லை? என்று கேட்டஅமெரிக்க பாப் இசைப் பாடகி ரிஹானாவுக்கு, “ஏனென்றால் அவர்கள் தீவிரவாதிகள்.. விவசாயிகள் அல்ல!” என்று பாஜக ஆதரவு நடிகை கங்கனா ரணாவத் திமிராக பதில் அளித்திருந்தார். இந்நிலையில், “யார்தீவிரவாதிகள்..? நாங்கள் விவசாயிகள்!” என்ற பதாகைகளுடன் வியாழனன்றுதில்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். கங்கனாவின் உருவபொம்மையை அவர்கள் எரித்தனர்.

                                             *******************

போலீசாருக்கான பேருந்துகளை திரும்பப் பெற்ற கெஜ்ரிவால்!

“விவசாயிகள் போராடும் இடத்துக்கு, போலீசாரும், துணை ராணுவப்படையினரும் செல்வதற்காக 360 பேருந்துகளை தில்லி அரசு வழங்கியிருந்தது. இந்நிலையில், போராடும் விவசாயிகளைச் சூழ்ந்து போலீசாரும், துணை ராணுவப்படையினரும் குவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்தப் பேருந்துகளை திரும்பப் பெறுவதாக கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு அறிவித்துள்ளது.

                                             *******************

எழுத்தாளர் கே.எஸ்.பகவான் முகத்தில் கறுப்பு மை வீச்சு!

புகழ்பெற்ற கன்னட எழுத்தாளர் கே.எஸ். பகவான் (75). இவர், வரலாற்றுஅடிப்படையில் இந்து மதம் என்று எதுவும் இல்லை என்று கூறியிருந்தார். இதன்மூலம் இந்துக்களை அவமதித்து விட்டதாக கூறி, பகவான் மீது பல இடங்களில் இந்துத்துவா பேர்வழிகள் வழக்கு தொடர்ந்தனர். இதிலொரு வழக்கில் ஆஜராக வந்தபோது, பெங்களூரு சிட்டி சிவில் நீதிமன்றத்தில் மீரா ராகவேந்திரா என்ற பெண் வழக்கறிஞர், எழுத்தாளர் கே.எஸ்.பகவான் மீது கறுப்பு மை பூசி அவமானப்படுத்தி உள்ளார்.

                                             *******************

மசூதிக்கான 5 ஏக்கர் நிலம் எங்களுக்கு சொந்தமானது 

இடிக்கப்பட்ட பாபர் மசூதிக்குப் பதிலாக, வேறொரு இடத்தில் மசூதி கட்டிக்கொள்வதற்கு 5 ஏக்கர் நிலம் வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி உ.பி. பாஜக அரசு அயோத்தி தானிப்பூர்அருகே 5 ஏக்கர் நிலத்தை ஒதுக்கீடு செய்து, அங்கு மசூதி கட்டுவதற்கு கடந்த ஜனவரி 26 அன்று அடிக்கல்லும் நாட்டப்பட்டு விட்டது. இந்நிலையில், மசூதிக்கு ஒதுக்கப்பட்ட நிலம் தங்களுக்கு சொந்தமானது என்று தில்லியைச் சேர்ந்த ராணி கபூர், ராமராணி பஞ்சாபி என்ற 2 சகோதரிகள் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

                                             *******************

வரிக் கொள்ளையை எவ்வளவுதான் சகிப்பது?

2014 ஜூன் மாதத்தி லிருந்து இப்போதுவரை 200 சதவிகிதம் வரை பெட்ரோலுக்கான வரிஉயர்த்தப் பட்டு உள்ளதாகவும்,  டீசலுக்கான வரிவிதிப்பு 600 சதவிகிதம் வரை உயர்த்தப்பட்டு உள்ளதாகவும் காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் குறிப்பிட்டுள்ளார். “கொள்ளையடிக்கும் மோடி அரசாங்கத்தை, இந்தியா இன்னும் எவ்வளவு காலம்தான் வேடிக்கை பார்க்க வேண்டும்?” என்றும் தரூர் கேள்வி எழுப்பி உள்ளார்.

                                             *******************

எஸ்.சி., எஸ்.டி. பணிநியமனம் மோடி அரசு அலட்சியம்

“மத்திய அரசுப் பணிகளில் சுமார் 90 சதவிகித இடங்களைக் கொண்ட பத்து துறைகளில் எஸ்.சி. பிரிவினருக்கு கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் 40 ஆயிரத்து 490 இடங்களும், எஸ்.டி. பிரிவினருக்கு 37 ஆயிரத்து 237 இடங்களும் ( backlog vacancies) நிரப்பப்படவில்லை” என்று விசிக எம்.பி. ரவிகுமார் நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு மத்தியஅமைச்சர் ஜிதேந்திர சிங் பதிலளித்துள்ளார்.

;