india

img

இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் கொரோனா தடுப்பூசி அதிக வீண்!

புதுதில்லி, ஏப்.20-
இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் கொரோனா தடுப்பூசி டோஸ்கள் அதிக வீணாகியுள்ளதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்துவரும் சூழலில் தற்போது 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. 
இந்நிலையில், கொரோனா தடுப்பூசி டோஸ்கள் வீணானது குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய அரசு பதிலளித்துள்ளது.
அதன்படி, ஏப்ரல் 11ஆம் தேதி வரை, இந்தியாவில்  44 லட்சத்து 78 ஆயிரம் டோஸ்கள் வீணாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
அவற்றில், அதிகபட்சமாக தமிழகத்தில் 12.10% டோஸ்கள் வீணாகியுள்ளது.

ஒருவருக்கு ஒரு குப்பி என தடுப்பு மருந்து இல்லாமல் 10 பேருக்கு ஒரு குப்பி , 20 பேருக்கு ஒரு குப்பி என்ற நிலையில் உள்ளதால் தடுப்பூசி போட்ட பின்னர் மீதம் உள்ளதை மீண்டும் அடுத்த நாட்களில் பயன்படுத்த முடியாமை காரணமாக தெரிவிக்கபட்டுள்ளது.

மேலும், கொரோனா தடுப்பூசிகளை வீணாக்காத மாநிலங்களில் கேரளா முதலிடத்தில் உள்ளது. 

;