india

img

வேளாண் சட்டங்களுக்கு இடைக்காலத்தடை - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

புதிய வேளாண் திருத்த சட்டங்களுக்கு இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. 
மோடி அரசு கார்ப்பரேட்களுக்கு ஆதரவாக கொண்டு வந்துள்ள புதிய வேளாண் திருத்த சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி லட்சக்கணக்கான விவசாயிகள் கடந்த 49 நாட்களாக தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தில்லியில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் 3 வேளாண் திருத்த சட்டங்களையும் மத்திய அரசு வாபஸ் பெரும் வரை போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று திட்ட வட்டமாக தெரிவித்துள்ளனர். இந்நிலையில் போராட்டக்களத்திலேயே 80க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர்.  மத்திய அரசுடன் விவசாய சங்க பிரதிநிதிகள் நடத்திய 8 கட்டபேச்சு வார்த்தையும் தோல்வியில் முடிந்தது. 
இந்நிலையில் இன்று வேளாண் திருத்த சட்டங்களுக்கு இடைக்கால தடை விதித்து  உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி பாப்டே உத்தரவிட்டுள்ளார். 
மேலும் ஹர்சிம்ரத்மான், வேளாண் பொருளியல் அறிஞர் அசோக்குலாட்டி, வேளாண் ஆராய்ச்சியாளர் பிரமோத் குமார் உள்ளிட்ட 4 பேர் கொண்ட குழுவினர் விவசாய சங்க பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவர் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. 
இந்நிலையில் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து நாளை முடிவு எடுக்கப்படும் என்ற விவசாய சங்க பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். 
 

;