india

img

ஸ்டேன் சாமி இறப்பு மனித உரிமை வரலாற்றில் ஏற்பட்ட கறை -  ஐ.நா

ஸ்டான் சுவாமியின் மரணம் இந்திய மனித உரிமை வரலாற்றில் ஒரு கறையாக நீடிக்கும் என ஐ.நா நல்லிணக்க அதிகாரி தெரிவித்துள்ளார். 

உபா சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த மனித உரிமைகள் ஆர்வலரான ஸ்டேன் சாமி, ஜூலை 5 ஆம் தேதி உயிரிழந்தார். இதுகுறித்து ஐ.நா சிறப்புச் செய்தித் தொடர்பாளர் மேரி லாலர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்து உள்ளதாவது.  ஆதாரங்களின் அடிப்படை இல்லாமல் கைது செய்யப்படும் மனித உரிமைகள் ஆர்வலர்களை, உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்பதை ஸ்டேன் சாமியின் இறப்பு நமக்கு உணர்த்துவதாகத் தெரிவித்துள்ளார். மனித உரிமைகளைக் காக்கப் போராடியவரைப் பயங்கரவாதி போல் சித்தரித்தது மன்னிக்கவே முடியாதது என்றும் மேரி லாலர் தெரிவித்துள்ளார். 

மேலும், 40 ஆண்டுகளுக்கும் மேலாக மனித உரிமைகளுக்காகவும் சமூக நீதிக்காகவும் போராடிய ஸ்டேன் சாமியின் இறப்பு இந்திய மனித உரிமைகள் வரலாற்றில் ஏற்பட்ட கறை. உரிமைகள் மறுக்கப்பட்டுப் பலியான ஸ்டேன் சாமி போல் இனி யாரும் உயிரிழக்கக் கூடாது என்று அவர் தெரிவித்துள்ளார்.

 

;