india

img

மார்ச் 22 வரை மாநிலங்களவை ஒத்திவைப்பு!

புதுதில்லி, மார்ச் 19-
மாநிலங்களவை மார்ச் 22 வரை ஒத்தி வைக்கப்படுவதாக சபைத்தலைவர் அறிவித்தார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது பகுதி திங்கள்கிழமை (மாா்ச் 8) தொடங்கியது.
இந்நிலையில், இன்று (வெள்ளிக்கிழமை) மாநிலங்களவை கூட்டத்தில் பங்கேற்ற எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து, மாநிலங்களவை மார்ச் 22ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்படுவதாக சபைத் தலைவர் அறிவித்தார்.

;