india

img

ஆகஸ்ட்  5 ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் பெகாசஸ் உளவு விவகாரம்

பெகாசஸ் உளவு விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை வரும் ஆகஸ்ட் 5 ஆம் தேதி தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதி சூர்யகாந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வருகிறது. 

இஸ்ரேல் நாட்டின் உளவு அமைப்பான ‘என்எஸ்ஓ’ உருவாக்கிய பெகாசஸ்  எனப்படும் உளவு மென்பொருளின் துணைக் கொண்டு இந்தியாவின் பத்திரிகையாளர்கள், செயற்பாட்டாளர்கள் எனப் பல நூறு பேர்களின் செல்பேசியை அரசு ஒட்டுக் கேட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 

அதனைத் தொடர்ந்து பெகாசஸ் விவகாரம் தொடர்பாக, உச்சநீதிமன்ற நீதிபதி அல்லது ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என மூத்த பத்திரிகையாளர்கள் என்.ராம், சசிகுமார் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில்  பொதுநல மனுத் தாக்கல் செய்தனர்.  இதேபோன்று, கேரள மாநில எம்.பி., எம்.எல்.சர்மா உள்ளிட்ட 5 பேரும் மனுத்தாக்கல் செய்தனர். 

இந்நிலையில், இந்த வழக்கு வரும் 5 ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று உச்சநீதிமன்ற இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதி சூர்யகாந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணை நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

;