india

img

மகாராஷ்டிரா : வெள்ளத்தால் உயிரிழந்தோர்  எண்ணிக்கை 164 ஆக உயர்வு 

மகாராஷ்டிராவில் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் மழையால் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. குறிப்பாக ரத்னகிரி, ராய்காட், சத்தாரா, கோலாப்பூர் உள்ளிட்ட மாவட்டங்கள் கடும் சேதத்தைச் சந்தித்தன. இந்நிலையில் மழையால் மகாராஷ்டிரா மாநிலத்தில் உயிரிழந்த 164 பேரின்  உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன. 100க்கும் மேற்பட்டவர்கள் மாயமாகியுள்ளனர் என அரசு வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டுள்ளது.

இதுவரை 2.29 லட்சம் மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.1028 கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும், 7,832 பேர் தற்போது 259 முகாம்களில் தங்கவைக்கப்பட்டு உள்ளனர். 

இந்நிலையில், மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, சதாரா மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பதான் தாலுகா பகுதிகளை இன்று பார்வையிட்டார். 

மேலும், நிவாரண நடவடிக்கைகளுக்காக ராய்காட் மற்றும் ரத்னகிரி மாவட்டங்களுக்கு ரூ. 2 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாகவும். வெள்ள நீர்  குறைந்து துப்புரவு நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ள மற்ற பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ரூ.50 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளதாகவும், அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

;