india

img

எய்ம்ஸ் மருத்துவமனையில் குழந்தைகளுக்கு கோவாக்சின் தடுப்பூசி 

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் குழந்தைகளுக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்தி மருத்துவப் பரிசோதனை இன்று தொடங்கியது.
இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை தீவிரமடைந்து தற்போது படிப்படியாக குறைய துவங்கி உள்ளது. இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தடுப்பூசி முக்கிய பங்கு வகிக்கும் என்று மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து இந்தியாவில் கோவாக்சின், கோவிஷீல்டு, ஸ்புட்னிக் வி தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. 
இதைத்தொடர்ந்து தற்போது பாரத் பையோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசிகளை 2 முதல் 18 வயது உள்ள குழந்தைகளிடம் பரிசோதனை செய்ய இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்புக்குக் கோரிக்கை வந்தது. இதையடுத்து கோவாக்சின் தடுப்பூசிகளைக் குழந்தைகளிடம் பரிசோதனை செய்யக் கடந்த மே 13ஆம் தேதி அனுமதி வழங்கியது. இதைத்தொடர்ந்து இன்று எய்ம்ஸ் மருத்துவமனையில் குழந்தைகளிடம்  பாரத் பையோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசிகளுக்கான மருத்துவப் பரிசோதனை இன்று தொடங்கி உள்ளது.


 

;