india

img

இந்தியாவில் ஒரே நாளில் 93249 பேருக்கு கொரோனா

இந்தியாவில் ஒரே நாளில் 93249 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை அதி வேகமாக பரவி வரும் நிலையில் கடந்த சில தினங்களாக புதிய பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதனால் பொதுமக்கள் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை அறிக்கையில்  கடந்த 24 மணி நேரத்தில் 93,249 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,24,85,509 ஆக உயர்ந்துள்ளது. 

நேற்று ஒரே நாளில் 513 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதன்மூலம் பலி எண்ணிக்கை 1,64,623 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 1,16,29,289 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் 60,048 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 

நாடு முழுவதும் பல்வேறு மருத்துவமனைகளில் 6,91,597 பேர் சிகிச்சையில் உள்ளனர். இந்நிலையில் நாடு முழுவதும் நேற்று வரை 7,59,79,651 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 
 

;