india

img

இம்மாதமே தொடங்கும் கொரோனா 3 ஆம் அலை - ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் தகவல்

ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவில் கொரோனா 3வது அலையைத் தொடங்குவதற்கான வாய்ப்புள்ளது என்றும் அக்டோபர் மாதத்தில் உச்சத்தில் இருக்கும் எனவும் ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். 

ஹைதராபாத் மற்றும் கான்பூர் ஐ.ஐ.டி.யின் ஆராய்ச்சியாளர்கள் கணித முறை அடிப்படையில் கொரோனா மூன்றாவது அலையைக் கணித்துள்ளனர். கணித அடிப்படையில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், ஆகஸ்ட் மாதத்தில் கொரோனா மூன்றாவது அலை வருவதற்கான சாத்தியங்கள் உள்ளதாகவும், அவ்வாறு ஏற்பட்டால் அக்டோபர் மாதத்தில் உச்சத்தை அடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 3வது அலை துவங்கும் போது தினசரி தொற்று ஒரு லட்சத்திற்கும் குறைவாகவே இருக்
கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரம் அலையின் உச்சபட்ச தொற்று எண்ணிக்கை ஒன்றரை லட்சம் வரைப்போகும் எனவும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இரண்டாவது அலை
யின் போது தினசரி தொற்று 4 லட்சத்தைத் தாண்டியது போன்று அளவுக்கு 3 ஆவது அலை தீவிரமாக இருக்காது. மேலும், ஜூன் மாதம் இறுதியில், நாட்டில் 20 ஆயிரம் பேர் வரை தினசரி பாதிக்க வாய்ப்பு உள்ளதாகவும், அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று அதிகம் பாதித்த கேரளா மற்றும் மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் 3 ஆவது அலையின் போது நிலைமை தலைகீழாக மாறும் எனவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.  

;