india

img

டூல்கிட் வழக்கில் கைது செய்யப்பட்ட திஷா ரவிக்கு ஜாமின் வழங்கியது தில்லி நீதிமன்றம்

விவசாய போராட்டத்திற்கு ஆதரவான டூல்கிட் வழக்கில் கைது செய்யப்பட்ட சுற்றுச்சூழலியல் ஆர்வலர் திஷா ரவிக்கு டெல்லி நீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது. 
மோடி அரசு கார்ப்பரேட்களுக்கு ஆதரவாக கொண்டு வந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி தலை நகர் தில்லியில் கடந்த ஆண்டு நவம்பர் 26ம் தேதி முதல் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சுற்றுசூழல்  ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க்கின் “ப்ரைடே’ஸ் பார் பியூச்சர்” (Fridays For Future) என்ற அமைப்பின் கிளையை இந்தியாவில் தொடங்கியவர் திஷா ரவி.   இந்நிலையில் விவசாயிகள் போராட்டம் தொடர்பான டூல் கிட்டை சமூக வலைதளங்களில்  பகிர்ந்தது தொடர்பான வழக்கில்,கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சுற்றுச் சூழலியல் ஆர்வலர் திஷா ரவியை, டெல்லி போலீசார் கடந்த 13ம் தேதி பெங்களூருவில்  கைது செய்தனர். அவரை டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.  திஷா ரவி கைது செய்யப்பட்டதற்கு பலதரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.  இதையடுத்து திஷா ரவி சார்பில் ஜாமின் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுமீதான விசாரணை 20ந்தேதி நடைபெற்றது. அதைத்தொடர்ந்து  திஷா ரவியின் நீதிமன்ற காவல் மேலும் 3 நாள்கள் நீட்டிக்கப்பட்டதுடன் தீர்ப்பும் ஒத்தி வைக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, இன்று திஷா ரவி ஜாமின் வழக்கில் டெல்லி அமர்வு நீதிமன்றம் ஜாமின் வழங்கி தீர்ப்பு வழங்கி உள்ளது. தலா ரூ.1 லட்சம் என 2 நபர்கள் பிணைத்தொகை வழங்கவும்  உத்தரவிட்டுள்ளது.
 

;