india

img

விலங்குகளை துன்புறுத்தினால்  ரூ.75,000 அபராதம், 5 ஆண்டு சிறை

புதுதில்லி, பிப்.07-
செல்லப்பிராணிகள், விலங்குகளை துன்புறுத்தினால் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
செல்லப் பிராணிகள், விலங்குகளை அடித்து துன்புறுத்துவது, கொல்வது போன்ற சம்பவங்கள் சமீப காலமாக அதிகரித்து வருகின்றன.
இந்த குற்றத்துக்கு தற்போது உள்ள சட்டத்தின்படி ரூ.50 வரை அபராதம் விதிக்கப்படுகிறது.
இந்நிலையில், இந்த விலங்கு வதை தடுப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
அதன்படி, இனி விலங்குகளை காயப்படுத்துவது அல்லது கொல்வது போன்ற செயல்களில் ஈடுபட்டால், ரூ.75 ஆயிரம் அபராதம் அல்லது 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனையோ அல்லது இரண்டுமோ விதிக்கப்படும். இதற்கான புதிய சட்டத்திருத்தம் விரைவில் கொண்டு வரப்படுகிறது.

;