india

img

மக்களின் முதுகெலும்பை மோடி அரசு உடைத்து விட்டது... லாலு பிரசாத் கடும் சாடல்....

பாட்னா:
மாட்டுத் தீவன ஊழல் வழக்குகளில் சிறைத் தண்டனை அனுபவித்து வந்த லாலு பிரசாத் யாதவ்,நீதிமன்றம் வழங்கிய ஜாமீனைத் தொடர்ந்து தற்போது தில்லியில் மகள் மிசா பாரதி இல்லத்தில் தங்கி ஓய்வெடுத்து வருகிறார்.

ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சியின் 25-ஆவது ஆண்டு விழாவையொட்டி, அவர் காணொலி முறையில் திங்களன்று கட்சித் தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார். பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சி அலுவலகத்தில் மிகப் பெரியஎல்இடி திரை பொருத்தப்பட்டு, லாலுவின் உரை ஒளிபரப்பப் பட்டது. அதில் லாலு பிரசாத் பேசியிருப்பதாவது:ஒன்றிய அரசின் தவறான கொள்கைகளால் நாடு ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பின்னுக்கு தள்ளப்பட்டு விட்டது. ஜிஎஸ்டி, பணமதிப்பு நீக்கம், கொரோனா ஆகியவற்றால் பொருளாதார சிக்கல் உருவாகி இருக்கிறது. 

பிரதமர் மோடி 10 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்குவதாக சொன்னார். ஆனால் அதை நிறைவேற்றவில்லை. மாறாக, வேலையின்மை உயர்ந்து விட்டது. விலைவாசி முன்னெப்போதும் இல்லாதஅளவிற்கு உயர்ந்து விட்டது. மக்களின் முதுகெலும்பே உடைந்து விட்டது. எங்களது ஆட்சிக் காலங்களில் பெட்ரோல் மற்றும் டீசல்விலை இந்த அளவுக்கு உயர்ந்துஇருந்தால் மக்கள் எங்களை தெருவில் நடமாட விட்டிருக்க மாட்டார்கள். ரயில்வே, பொதுத்துறை நிறுவனங்களின் சொத்துகள் அடிமாட்டு விலைக்கு விற்கப்படுகின்றன. குறிப்பாக, ரயில்வே துறையை தனியார்மயமாக்குவது நாட்டுக்கு நல்லது கிடையாது. இது ஒருபக்கம் என்றால், மக்கள் மத்தியில் ஒற்றுமையை குறைப்பதற்கு இன்னொரு பக்கம்சதிச் செயல்கள் நடந்து வருகின்றன. அயோத்தி பிரச்சனைக் குப் பிறகு சிலர், மதுரா பற்றி பேசஆரம்பித்துள்ளனர். அதிகாரத்தை சுவைக்க வேண்டும் என்றஒற்றை நோக்கத்திற்காக இந்தநாட்டை அழித்துக் கொண்டிருக்கிறார்கள். கடந்த மக்களவை மற்றும்சட்டப்பேரவைத் தேர்தல்களின் போது சிறையில் இருந்து வெளியேவந்து பிரச்சாரம் செய்ய வேண் டும் என்று நினைத்தேன் ஆனால் அது முடியவில்லை. ஆனாலும், அரசியல் எதிரிகள் கொடுக்கும் நெருக்கடிகள் மற்றும் சதிகளுக்கு பயந்து பின்வாங்க மாட்டேன். மதவாத சக்திகளின் முன் மண்டியிடுவதற்குப் பதில் உயிரை விடுவது மேல். இந்த கொள்கையில் இருந்து நான் என்றுமே பின்வாங்க மாட்டேன்.இவ்வாறு லாலு பிரசாத் பேசி
யுள்ளார்.

;