india

img

கூட்டாளிகளுடன் மது அருந்திய பாஜக மாவட்டத் தலைவர்.... பீகார் அரசின் மதுவிலக்கு எங்கே போனது?

மதுபானி:
பீகாரில் ஐக்கிய ஜனதாதளம் -பாஜக தலைமையிலான கூட்டணிஅரசு நடைபெற்று வருகிறது. ஐக்கியஜனதாதளம் தலைவர் நிதிஷ் குமார்முதல்வராக இருக்கிறார். அவர்,2015-இல் முதல்வரான பின், பீகாரில் மதுவிலக்கை அறிவித்தார். இதனை பலர் எதிர்த்தபோதும், மதுவிலக்கை மீறுவோருக்கு அபராதம் மற்றும் சிறைத் தண்டனைகளை நிறைவேற்றினார்.

இந்நிலையில், நிதிஷ் குமாரின்கூட்டணிக் கட்சியான பாஜக-வைச்சேர்ந்த மாவட்டத் தலைவர் ஒருவரே, அவரது கூட்டாளிகளுடன் சேர்ந்து கொண்டு மது அருந்தும் வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.பாஜகவின் ஜஞ்சர்பூர் பிரிவின் மாவட்டத் தலைவராக இருக்கும் சியரம் சாஹூ-தான் அந்த நபராவார். அவர் மதுபானி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தனது நண்பர்களுடன் சேர்ந்து, பாப் இசையைக்கேட்டவாறே, மது அருந்தி கும்மாளம் போட்டுள்ளார். இதுதொடர் பான வீடியோ வெளியான நிலையில், செல்போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டு தற்போது அவர் தலைமறைவாகி விட்டார்.இதனிடையே, மது விலக்கு அமலில் உள்ளதாக கூறப்படும் பீகாருக்குள் மது எப்படி வந்தது? பாஜகமாவட்டத் தலைவர் சியரம் சாஹூ மீது முதல்வர் நிதிஷ் குமார் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்? என்று ராஷ்ட்ரிய ஜனதாதளம் தலைவர் தேஜஸ்வி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் கேள்விஎழுப்பியுள்ளனர்.

;