india

img

போராட்டத்திற்கு அனுமதி கேட்டு 5 முறை கடிதம் எழுதியும் பதிலில்லை.... ‘ஜன் லோக்பால்’ அன்னா ஹசாரே புலம்பல்

புதுதில்லி:
மன்மோகன் சிங் தலைமையிலான ஆட்சியின் போது, ஊழலுக்கு எதிரான ‘ஜன் லோக்பால்’ விவகாரத்தை பூதாகரமாக்கி, மத்தியில் பாஜக ஆட்சிக்குவர உதவியவர் அன்னா ஹசாரே. பின்னாளில் மோடி பிரதமர் ஆனதும் மவுனமாகி விட்டார். இப்போதுவரை ‘ஜன் லோக்பால்’ அமலாகாத போதும், போராட்டம் எதையும் ஹசாரே நடத்தவில்லை.

இந்நிலையில், விவசாயி களுக்கு ஆதரவாக தில்லி ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரதம் நடத்தத் திட்டமிட்டு இருப்பதாகவும், ஆனால், மத்திய அரசு அனுமதி வழங்க மறுத்து வருவதாகவும் ஹசாரே பேட்டி அளித்துள்ளார்.“தில்லியில் போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவாக, நான் எனது கடைசி உண்ணாவிரதத்தை அவர்களுக்காக நடத்தப் போகிறேன். இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருக்கிறேன். விவசாயிகள் கோரிக்கை தொடர்பாக இதுவரை நான் 5முறைமத்திய அரசைத் தொடர்பு கொண்டேன். ஆனால், எந்தவிதமான பதிலும் இல்லை. ஆதலால், நான் கடைசி முயற்சியாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முடிவு செய்துவிட்டேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.“ஊழலுக்கு எதிராகநான் ராம்லீலா மைதானத்தில்போராட்டம் நடத்தியபோது, இதே பாஜக-வைச் சேர்ந்தவர்கள் என்னைப் பாராட்டினார் கள், புகழ்ந்தார்கள். ஆனால், இப்போது கோரிக்கை தொடர்பாக எழுத்துப்பூர்வ உறுதியளித்தாலும் அதைநிறைவு செய்யமுடியவில்லை” என்றும்ஹசாரே புலம்பியுள்ளார்.
 

;