india

img

பவர்கிரிட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலை

பவர்கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதன் விவரம் ;
பணி: Diploma Trainee (Electrical)
காலியிடங்கள்: 23

பணி: Diploma Trainee(Civil)
காலியிடங்கள்: 03

தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் 70 சதவிகித மதிப்பெண்களுடன் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 12.07.2021 தேதியின்படி 27 வயதிற்குள் இருக்க வேண்டும். 

உதவித் தொகை: பயிற்சியின்போது உதவித்தொகையாக மாதம் ரூ.27,500 வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் சிபிடி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.300. இதனை ஆன்லைனில் செலுத்த வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: www.powergrid.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்தவுடன் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 18.09.2021

;