india

img

பள்ளிகளில் இஸ்ரோ உதவியுடன் செயற்கைக்கோள் தொலைக்காட்சி வகுப்பறை...

புதுதில்லி:
கொரோனா வைரஸ் பரவலால் பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளதால், மாணவர்களுக்கு பாடங்களை போதிக்க  நாடுமுழுவதும் பள்ளிக்கூடங்களில் செயற் கைக்கோள் தொலைக்காட்சி வகுப்பறையை அமைக்கத் தேவையான தொழில்நுட்ப உதவிகளை வழங்க, கல்விக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் இஸ்ரோ சம்மதம் தெரிவித்துள்ளது.

கொரோனா பரவல் தடுப்பு ஊரடங்கால் மாணவர்கள்  பள்ளி,கல்லூரிகளுக்கு  செல்வதில் தடை ஏற்பட்டுள்ளது. ஆன்லைன் மூலமும், யூடியூப் மூலமும்தான் கல்வி கற் பிக்கப்படுகிறது.கடந்த ஓராண்டாக கற்றலில் ஏற்பட்ட இடைவெளியைச் சமன் செய்யும் நோக்கில் செயற்கைக்கோள் தொலைக்காட்சி உதவியுடன் வகுப்பறை அமைக்க உதவி செய்யக்கோரி இஸ்ரோவிடம், கல்விக்கான நாளுமன்ற நிலைக்குழு கேட்டிருந்தது.கல்விக்கான நாடாளுமன்ற நிலைக்குழுக்கூட்டம், நிலைக்குழுத் தலைவர் எம்.பி.வினய் சகாஸ்ரபுத்தே தலைமையில் நடந்தபோது இந்த விவகாரம் குறித்து பேசப் பட்டது.

இந்தக் கூட்டத்தில் உத்தரப் பிரதேசம்,மகாராஷ்டிரா, தெலுங்கானா, அருணாச்சலப்பிரதேசம் ஆகிய மாநிலங்களின் கல்வித் துறைச் செயலாளர்கள் பங்கேற்றனர். இஸ்ரோ சார்பிலும் விஞ்ஞானிகள் பங்கேற்று,நாடு முழுவதும் பள்ளிக்கூடங்களில் சாட்டிலைட் தொலைக்காட்சி வகுப்பறை அமைப் பது தொடர்பான செயல்திட்டத்தையும், விரிவான விளக்கத்தையும் அளித்தனர்.இந்தக் கூட்டம் குறித்து நிலைக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கையில்,  “இஸ்ரோ அமைப்பிலிருந்து விஞ்ஞானிகள் நிலைக்குழுக் கூட்டத்தில் பங்கேற்று, செயற்கைக்கோள் தொலைக்காட்சி வகுப்பறையால் மாணவர்களுக்கு விளையும் பயன், செயல்பாடுஆகியவை குறித்து விரிவாக விளக்கினர்.மத்திய மின்னணு மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சக அதிகாரிகள், தூர்தர்ஷன் தொலைக்காட்சியைச் சேர்ந்தவர்களும் இதில் பங்கேற்றனர். மாநில அரசுகள் எங்கள் உதவிகளைப் பயன்படுத்த விருப்பமாக இருந்தால் செயற்கைக்கோள் உரிமையை வழங்கி, பள்ளிக்கூடங்களில் செயற்கைக்கோள் வகுப்பறையை அமைத்து தொழில்நுட்ப உதவிகள் வழங்க இஸ்ரோ தயாராக இருக்கிறது என்று தெரிவித்தனர்.

;