india

img

காலத்தை வென்றவர்கள்... சமூக சீர்திருத்தவாதி ஜோதிபா கோவிந்த ராவ் புலே பிறந்தநாள்.....

ஜோதிபா கோவிந்த ராவ் புலே ஏப்ரல் 11, 1827 இல் மகாராஷ்டிரா மாநிலத்தில் பிறந்தார். அக்கால வழக்கப்படி இவர் தன் 13 ஆம் அகவையில் சாவித்ரிபாய் (9 அகவை)அவர்களை 1840 இல் திருமணம் செய்து கொண்டார். ஜோதிராவ் புலே, தனது மனைவி சாவித்ரிபாய் புலேயை சாதீய, பெண் ஒடுக்குமுறைக்குஎதிரான தன்னுடைய போராட்டத்தில்இணைத்துக் கொண்டார். இவர்களுக்குக்குழந்தைகள் இல்லை. ஒரு விதவையின் யஸ்வந்த் ராவ்என்ற குழந்தையைத் தத்தெடுத்து வளர்த்தனர்.

சமூக சீர்திருத்தவாதி 
ஜோதிபா கோவிந்த ராவ் புலே பிறந்தநாள்1842 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட பெண் குழந்தைகளுக்கான அவரது முதல் பள்ளிக் கூடத்திற்கு சமூக அந்தஸ்து கிடைக்கவில்லை. குழந்தைகளைக் கருவிலேயே கலைக்க வேண்டிய நிலையிலோ அல்லது பிறந்த பின் அவற்றைக் கொல்ல வேண்டிய நிலையிலோ உள்ள விதவைப் பெண்களுக்கான இல்லத்தை 1863 ஆம் ஆண்டில் நிறுவினார். 1864 ஆம் ஆண்டில் நடைபெற்ற சாரஸ்வத் பிராமண விதவையின் மறுமணத்தில் முக்கியப் பங்கு புலேயினுடையது. 1882 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட பெண்விடுதலை பற்றிய தவறான கருத்துக்களைக் கொண்ட ஆய்வுக் கட்டுரையான, ஆண்-பெண் பற்றிய ஒப்பீடு (ஸ்திரீ புருஷ்துலானா) என்பதை எதிர்த்து குரல் கொடுத்தவர் புலே மட்டுமே.ஜோதிராவ் புலேவும் அவரது மனைவி சாவித்ரிபாய் புலேவும் இணைந்து பெண் கல்விக்காகவும், பெண்ணுரிமைக்காகவும் இறுதிவரை ஆற்றிய அரும்பணி வரலாறானது.

;