india

img

காலத்தை வென்றவர்கள் : தோழர் பாஜுபான் ரியாங் நினைவு நாள்...

திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்ததோழர் பாஜுபான் ரியாங் திரிபுரா மாநில பழங்குடியினர் நலனுக்காக அயராது உழைத்தவர். இவர் 1973ஆம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திரிபுரா மாநிலக் குழுவிற்குத் தேர்ந்தெடுக்கப்பட் டார். 2002ஆம் ஆண்டு திரிபுரா மாநில செயற்குழு உறுப்பினர் ஆனார். 2008ஆம் ஆண்டு நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டில் மத்தியக் குழு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.இவர் திரிபுரா மாநில சட்டமன்ற உறுப்பினராக இருமுறை தேர்ந்தெடுக்கப்பட்டார். திரிபுரா மாநில வேளாண்மைத் துறை அமைச்சராகவும் செயல்பட்டார். 

இவர் திரிபுரா (கிழக்கு) நாடாளுமன்ற உறுப்பினராக ஏழு முறை தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்டது வரலாற்றுச் சிறப்பு மிக்கது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு (1)ல் வன உரிமைச் சட்டம் கொண்டு வரக் காரணமாக இருந்த முக்கியமான தலைவர்களுள் இவர் குறிப்பிடத் தக்கவராவார்.அகில இந்திய விவசாயிகள் சங்க தலைவராகவும் ஆதிவாசிகள் அதிகார் ராஷ்ட்ரிய சமிதி நிறுவனத் தலைவராகவும் கணமுக்தி பரிஷத் தலைவராகவும் திரிபுராவில் திறம்படப் பணியாற்றி விவசாயிகள் மற்றும் பழங்குடியினர் மத்தியில் நிரந்தரமான செல்வாக்கைப் பெற்றிருந்த உன்னதத் தலைவர் பாஜுபான் ரியாங்.இவர் 2020ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21ஆம் நாள் மறைந்தார்.

பெரணமல்லூர் சேகரன்

;