india

img

காலத்தை வென்றவர்கள் : எல்லைக் காந்தி நினைவு நாள்....

எல்லைக் காந்தி என அழைக்கப்படும் கான் அப்துல் கபார் கான் 1890ல் பெஷாவரில் பிறந்தார். இவர் இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சியைஅகிம்சை முறையில் எதிர்த்தவர். மகாத்மா காந்தியின் நெருங்கிய நண்பர். 

குதை கித்மத்கர் (“இறைவனின் தொண்டர்கள்”) என்ற புரட்சிப் படையை அமைத்த இவர் பலமுறை ஆங்கிலேயர் ஆட்சியில் சிறையில் அடைக்கப்பட்டார்.இந்தியப் பிரிவினையைக் கடுமையாக எதிர்த்த இவர், காங்கிரஸ் கட்சி பிரிவினைத் திட்டத்தை ஆதரித்தவுடன், “எங்களைஓநாய்களிடம் எறிந்துவிட்டீரே” என்று காங்கிரஸ் தலைவர்களிடம் சொன்னார். 1946 ஆம் ஆண்டு நவகாளியில் நடை பெற்றகலவரத்திற்குப் பின் காந்தியுடன் அமைதிப்பயணம் மேற்கொண்டார்.

இந்தியப் பிரிவினைக்குப் பிறகு பாகிஸ்தானில் வாழ்ந்த இவர் பலமுறை பாகிஸ்தான் ஆட்சியால் சிறையில் அடைக்கப்பட்டார். இந்திய உளவாளி என்று தூற்றப்பட்டார்.1985-இல் நோபல் அமைதி பரிசுக்கு தேர்வு செய்யப்பட்ட இவர் 1987-இல் பாரத ரத்னா பெற்ற முதல் அயல்நாட்டவர் என்ற பெருமை பெற்றவர்.1988 ஜனவரி 20இல் இவர் இயற்கை எய்தினார். இவரின் கடைசி ஆசைக்கேற்ப பிறந்த ஊரான ஜலாலாபாத் என்ற ஊரில் இவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. இவரது இறுதி ஊர்வலத்தில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் பெஷாவரில் இருந்து கைபர் கணவாய் வழியாக ஜலாலாபாத்துக்குச் சென்றனர். சோவியத் ஆப்கானியப் போர் கடுமையாக நடந்து கொண்டிருந்த போதும் இவரது இறுதிச் சடங்குகளை நிறைவேற்ற தற்காலிகப் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது.

===பெரணமல்லூர் சேகரன்====

;