india

img

காலத்தை வென்றவர்கள் : வி.பி.சிங் பிறந்த நாள்...

விஸ்வநாத் பிரதாப் சிங் 1931ஆம் ஆண்டு ஜுன் மாதம் 25ஆம் நாள் பிறந்தார்.இவர் நேரு காலத்தில் அலகாபாத் உள்ளூர்அரசியலில் நுழைந்து விரைவில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் தன் உறுதியான நேர்மையின் காரணமாக புகழ் பெற்றார். இவரின் அரசியல் வாழ்வு முழுக்க நேர்மையாக இருந்து மதிப்பு பெற்றார்.ஜனதா கட்சியின் குருவான ஜெயப்பிரகாஷ் நாராயணனின் பிறந்த நாளான அக்டோபர் 11 அன்று 1988 இல் ஜனமோர்ச்சா, ஜனதாகட்சி, லோக் தளம், காங்கிரஸ் (எஸ்) ஆகிய கட்சிகள் இணைந்து ஜனதா தளம் என்ற புதிய கட்சியை தோற்றுவித்தனர். ஜனதா தளத்திற்குவி. பி. சிங் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மாநிலக் கட்சிகளானதிமுக, தெலுங்கு தேசம், அசாம் கன பரிசத் ஆகியவற்றுடன் இணைந்துதேசிய முன்னனி உருவாக்கப்பட்டது. 1989 - டிசம்பர்2லிருந்து 1990-நவம்பர் 10  வரை இவர் இந்தியாவின் பிரதமராக இருந்தார்.ஜனதா தளம் ஆட்சியில் வி.பி.சிங் தலைமையில் மண்டல் கமிஷன் பரிந்துரை உயிர்பெற்றது. தேசிய அளவில் சமூக நீதி தொடர்புடைய கருத்துக்களையும், பிரச்சனைகளையும் முன்னெடுத்து செல்ல முடிவு செய்து மண்டல் கமிசன் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த முடிவு செய்தார். மண்டல் கமிஷன் பரிந்துரையை அமல்படுத்தியதாலும், அப்போது வட இந்தியாவில் நடந்த ராமர் யாத்திரையை தடுத்து நிறுத்தி அத்வானி கைது செய்யப்பட்டதாலும் ஜனதா தளம் ஆட்சிக்கு பாஜக அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொண்டதால் வி.பி.சிங் பிரதமர் பதவியைஇழந்து ஜனதா தளம் ஆட்சி கவிழ்ந்தது.வி.பி.சிங் உடல் நலக்குறைவால் 27-11-2008 அன்று மரணம் அடைந்தார். 

பெரணமல்லூர் சேகரன்

;