india

img

விவசாயிகளுடன் ஏன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை? பிரதமர் மோடி விளக்கம் அளித்திட வேண்டும்..... அகில இந்திய விவசாயிகள் சங்கம் அறிக்கை....

புதுதில்லி:
கடந்த இரண்டு மாதங்களாக விவசாயிகள் போராட்டத்திற்குத் தீர்வு காணப்பேச்சு வார்த்தைகள் ஏன் நடத்தவில்லைஎன்று பிரதமர் மோடி விளக்கம் அளித்திடவேண்டும் என்றும், விவசாயிகளுக்கு ஆர்எஸ்எஸ்-இன் ‘தேசப் பக்தச் சான்றிதழ்’ தேவை இல்லை என்றும் அகில இந்திய விவசாயிகள் சங்கம் கூறியுள்ளது.

இது தொடர்பாகச் சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் டாக்டர் அசோக்தாவ்லே மற்றும் பொதுச் செயலாளர் ஹன்னன் முல்லா ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார்கள். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:

விவசாயிகள் போராட்டத்திற்குத் தீர்வு காண்பதற்கான முயற்சிகளைச் சீர்குலைத்திடத் தேச விரோதச் சக்திகளும்,சமூக விரோதச் சக்திகளும் முயற்சித்துக்கொண்டிருக்கின்றன என்ற பெங்களூரில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் மாநாட்டு அறிக்கையில் கூறப்பட்டிருப்பதற்கு அகில இந்திய விவசாயிகள்சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துக்கொள்கிறது. அவ்வாறு சீர்குலைத்திடும்‘தேச விரோதச், சமூக விரோத சக்திகள்’எவை என்பதை ஆர்எஸ்எஸ் மக்கள் மத்தியில் கூற வேண்டும்.
ஆர்.எஸ்.எஸ். சான்றிதழ் தேவையில்லை சம்யுக்த கிசான் மோர்ச்சா என்பதுநாட்டிலுள்ள பல்வேறு விவசாயச் சங்கங்களின் கூட்டுத் லைமையாகும். இந்தச் சங்கங்கள் நிலப்பிரபுத்துவ மற்றும் ஏகாதிபத்தியச் சக்திகளை எதிர்த்துப் ராடிய ரம்பரியத்தைப் பெற்றிருப்பனவாகும். இவற்றுக்கு நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் பங்களிப்பே செய்திடாத ஆர்எஸ்எஸ் இயக்கத்திடமிருந்து ‘தேசப் பக்தச் சான்றிதழ்’எதுவும் தேவையில்லை.

 சம்யுக்த கிசான் மோர்ச்சா எப்போதுமே, விவசாயிகள் போராட்டத்திற்குத் தீர்வு காண அரசாங்கத்துடன் விவாதம்நடத்திட எப்போதும் தயாராக இருக்கிறது. இதற்கான சுமுகமான சூழ்நிலையையும், தீர்வு காண்பதற்கான மார்க்கங்களைக் கண்டறிவதற்கான விவாதத்தைத் தொடக்கி வைக்க வேண்டிய பொறுப்பும் அரசாங்கத்திடமே இருக்கிறது.ஜனவரி 22 அன்று விவசாயிகளுடன்நடைபெற்ற விவாதத்தின்போது அமைச்சரவைக் குழு உறுப்பினர்கள், ஒன்றரை ஆண்டு காலத்திற்கு வேளாண்சட்டங்கள் மூன்றையும் இடைநீக்கம் செய்து வைப்பதாக முன்மொழிவினை முன்வைத்தார்கள். இதனைச் சம்யுக்த கிசான் மோர்ச்சா நிராகரித்துவிட்டது. அதன்பின்னர் இன்றுவரையிலும் அரசாங்கள் புதிய பரிந்துரைகள் எதனையும்முன்வைத்திட வில்லை. விவசாயிகளின் முக்கியமான கோரிக்கையான, கொள்முதலின்போது விவசாய விளைபொருள்களுக்குச் சி2+50 சதவீதத்துடன் (C2+50%) குறைந்தபட்ச ஆதார விலைநிர்ணயம் செய்வதற்கான சட்டரீதியானஉத்தரவாதத்தை அளிப்பது தொடர்பாகவிவாதித்திடத் தயாராக இல்லை.

எதேச்சதிகார அணுகுமுறையை ஏற்க முடியாது
2020ஆம் ஆண்டு மின்சாரச் சட்டமுன்வடிவை விலக்கிக்கொள்வதைப் பொறுத்தவரை, அமைச்சரவைக் ழுஇந்தச் சட்டமுன்வடிவைத் தொடர்ந்திடமாட்டோம் என்று முன்பு நடைபெற்ற விவாதத்தின்போது ஏற்றுக்கொண்டிருந்தது. அதனை வெளிப்படையாக அறிவித்தும் இருந்தது. ஆனால் தான் கொடுத்த உறுதிமொழியிலிருந்து பின்சென்று இப்போது, நடைபெற்றுக் கொண்டிருக்கும் நாடாளுமன்றக் ட்டத்தொடரில் மின்சாரத் திருத்தச்சட்டமுன்வடிவை மோடி அரசாங்கம் தாக்கல் செய்திருக்கிறது. சட்டப்பூர்வமாகச் செயல்பட வேண்டிய ஓர் அரசாங்கமானது இதுபோன்று எதேச்சதிகார அணுகுமுறையுடன் நடந்துகொள்வதை ஏற்க முடியாது.  போராடும் விவசாயிகளுடன் பேச்சு வார்த்தை நடத்திடத் தொலைபேசி மூலம் ஓர் அழைப்பு போதும் என்று மோடி கூறியிருந்தார். ஆனாலும் 2021ஜனவரி 22ஆம் தேதியிலிருந்தே போராடும் விவசாயிகளுடன் விவாதத்தை மேற்கொள்ள ஒரு சுமுகமான சூழ்நிலையை உருவாக்க எவ்வித முயற்சியையும் ஏன்எடுக்கவில்லை என்பதை விளக்க வேண்டியது மோடி அரசாங்கத்தின் பொறுப்பாகும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.(ந.நி.)

;