india

img

விவசாயிகளுக்கு ஆதரவாக பேசிய சுற்றுச்சூழல் ஆர்வலருக்கு வெளியுறவுத்துறை பதிலளிக்க வேண்டிய அவசியம் ஏன்? நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் எதிர்ப்பு...

புதுதில்லி:
வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகப் பேசிய சுற்றுசூழல் ஆர்வலரான இளம்பெண் கிரேட்டா தன்பெர்க்கிற்கு மத்திய வெளியுறவுத் துறை ஏன் பதில் அளித்தது? என்று நாடாளுமன்றத்தில்  எதிர்க்கட்சி எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்த னர்.

வேளாண் சட்டங்களை எதிர்த்து தில்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு சுற்றுச்சூழல்ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க், அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பாடகி ரிஹானா ஆகியோர் ஆதரவை தெரிவித்திருந்தனர்.விவசாயிகளுக்கு ஆதரவாகப் பேசிய சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க்கிற்கு எதிராக கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், பிரபல பாடகி லதா மங்கேஷ்கர்போன்ற பிரபலங்கள் திசை திருப்பப்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.மக்களவையில் குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது காங்கிரஸ் மக்களவைக்குழு தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்ரி பேசுகையில், செங்கோட்டையில் சிலரை கொடியேற்ற அனுமதி அளித்துவிட்டு விவசாயிகள் மீது ஆட்சியாளர்கள் பலி சுமத்துகின்றனர் என்றார். இத்தனை கட்டுப்பாடுகளை மீறி செல்வதற்கு மத்திய அமைச்சர் அமித்ஷா துணைபோனதாக அவர் மறைமுகமாக குற்றம் சாட்டினார்.

திரிணாமுல் காங்கிரஸ் எம்பிமஹுவா மொய்த்ரா பேசுகை யில், நாட்டில் அறிவிக்கப்படாத அவசர நிலை பிரகடனம் செய்யப் பட்டுள்ளது. விவசாயிகளுக்கு ஆதரவாக பேசிய 18 வயது இளம் பெண்ணுக்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது?  கடும் குளிரில் போராடும்விவசாயிகளுக்கு உணவு, குடிநீர் வழங்க கூட மத்திய அரசு முன்வரவில்லை என்றார்.  பிரதமர் மோடியை குறிப்பிட்டே எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அவையில் கடும் விமர்சனம் செய்தனர்.

;