india

img

ரபேல் ஒப்பந்தத்தைப் பெற ரூ. 8.62 கோடி கைமாறிய விவகாரம்.... மத்திய அரசில் லஞ்சம்பெற்ற அந்த கறுப்பு ஆடு யார்? பிரதமர் மோடி பதில் கூற காங்கிரஸ் வலியுறுத்தல்....

புதுதில்லி;'
ரூ. 58 ஆயிரம் கோடி மதிப்பிலான ரபேல் போர் விமானத் தயாரிப்பு ஒப்பந்தங்களைப் பெறுவதற்காக, பிரான்ஸ் நாட்டின் ‘டஸ்ஸால்ட்’ நிறுவனம், இந்தியாவைச் சேர்ந்த இடைத் தரகருக்கு ரூ. 8 கோடியே 62 லட்சம் லஞ்சம்கொடுத்ததாக வெளியான செய்தி பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

அகஸ்டா வெஸ்ட்லேண்ட் விவிஐபி விமான இடைநிலை ஒப்பந்த விவகாரத்தில், மோசடி நடந்ததாக ‘டெப்ஸிஸ் சொல்யூஷன்ஸ்’ நிறுவனத்தைச் சேர்ந்த சுஷேன் மோகன் குப்தா, கடந்த 2019-ஆம் ஆண்டு கைதுசெய்யப்பட்டார். இவர்தான் ரபேல் விமானக் கொள் முதல் ஒப்பந்த விவகாரத்திலும் இடைத்தரகராக செயல்பட்டு, ரூ. 8 கோடியே62 லட்சம் பெற்றுள்ளார் என்பது, பிரான்ஸ் நாட்டின் ஊழல் தடுப்புப் பிரிவான ‘ஏஜென்ஸ் பிராங்காயிஸ் ஆன்டிகரப்ஷன் (AFA) தகவல்களின் அடிப்படையில், ‘மீடியாபார்ட்’ நிறுவனம்  செய்தியில் வெளிவந் துள்ள உண்மையாகும்.

இந்நிலையில், ரபேல் விமான ஒப்பந்தத்தில், சுஷேன் மோகன் குப்தா வாங்கிய ரூ. 8 கோடியே 62 லட்சம்லஞ்சப் பணம் மத்திய அரசில் யாருக்குவழங்கப்பட்டது? என்ற உண்மையையும் வெளிக்கொண்டுவர வேண்டும் என்று காங்கிரஸ் தலைமை செய்திதொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலாவலியுறுத்தியுள்ளார்.“ரபேல் ஒப்பந்தத்தில் ஊழல் நடந்ததாக ராகுல் காந்தி மீண்டும் மீண்டும்கூறி வந்தார். பிரான்ஸ் நாட்டு செய்திநிறுவனத்தின் தகவல்கள் மூலம் தற்போது அது உண்மை என நிரூபிக்கப்பட்டு இருக்கிறது. இந்தியாவின் மிகப்பெரிய இந்த பாதுகாப்பு ஒப்பந்தத்தில், உண்மையில் எவ்வளவு லஞ்சம் மற்றும் கமிஷன் வழங்கப்பட்டிருக்கிறது என்பதை அறிய முழுமையான மற்றும் சுதந்திரமான விசாரணை இப்போது தேவை. அப்படி கொடுத்திருந்தால், இந்திய அரசில் யாருக்கு அது கொடுக்கப்பட்டது? என்பதை கண்டறிய வேண்டும். இந்த விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடியும் நாட்டுக்கு பதில் கூற வேண்டும்.இருநாட்டு அரசுகளுக்கு இடையேயான நேரடி பாதுகாப்பு ஒப்பந்தம் அல்லது இந்திய பாதுகாப்பு கொள் முதல் திட்டத்தில் டி.பி.பி.க்கு எதிராகஇடைத்தரகர், கமிஷன் போன்றவற்றை அனுமதிக்க முடியாது” என்றும் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா கூறியுள்ளார்.

இதனிடையே ரபேல் விவகாரத்தில் எழுந்துள்ள குற்றச்சாட்டை மத்திய பாஜக அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மறுத்துள்ளார். “ரபேல் ஒப்பந்தத்தில் லஞ்சம்கொடுக்கப்பட்டதாக வெளியாகி இருக்கும் தகவல் முற்றிலும் ஆதாரமற்றது.அப்படி இதில் முறைகேடு நடந்திருப்பதாக வெளியாகி இருக்கும் தகவல், அங்குள்ள கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு இடையேயான போட்டியால் வெளியாகி இருக்கலாம்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

;