india

img

பெகாசஸ் ஸ்பைவேரை இந்திய அரசு வாங்கியதா; இல்லையா? எதிர்க்கட்சிகளின் ஒற்றைக் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் ஒளியும் மோடி அரசு...

புதுதில்லி:
ஒன்றிய பாஜக அரசானது, இஸ்ரேலைச் சேர்ந்த என்.எஸ்.ஓ. குழுமத்தின் ‘பெகாசஸ் ஸ்பைவேர்’ (Pegasus spyware) மூலம் அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்களை வேவு பார்த்த விவகாரம், இந்திய அரசியலில் புயலைக் கிளப்பியுள்ளது.
எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் இப்பிரச்சனையைக் கிளப்பி இரண்டு நாட்களாக போராடிவருகின்றன. ‘பெகாசஸ் ஸ்பைவேர்’ வேவு மென்பொருளை உருவாக்கிய இஸ்ரேலைச் சேர்ந்த என்.எஸ்.ஓ. நிறுவனமோ, அரசாங்கங்களைத் தவிர்த்து வேறு யாருக்கும் இந்த மென்பொருளை விற்கவில்லை என்று கூறுகிறது.

இந்திய அரசோ பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் யாரையும் வேவு பார்க்கவில்லை என்பதையே மீண்டும் மீண் டும் சொல்லிக் கொண்டிருக்கிறது. என்எஸ்ஓ நிறுவனம், அரசாங்கங்களுக்கு மட்டுமே வேவு மென்பொருளை விற்றது; ஆனாலும், இந்திய அரசாங்கம் அதைப் பயன்படுத்திவேவு பார்க்கவில்லை என- இந்த இரண்டையுமே உண்மை என்று எடுத்துக் கொண்டாலும், வேறு யார்தான் வேவு பார்த்தது? என்ற கேள்விக்கு இப்போது வரை பதி லில்லை.‘பெகாசஸ் ஸ்பைவேர்’ புதிதல்ல. 2016-இல் ஐபோன் பயனர் களை இது குறிவைப்பதாக கூறப்பட்டது. பிறகு 2019-இல் இந்தியாஉள்ளிட்ட பல நாடுகள் இதை உளவுபார்க்க பயன்படுத்துவதாகவும் புகார் எழுந்தது. இத்தகைய ஆபத்தான வேவு மென்பொருள் இந்தியாவில் ‘வாட்ஸ்ஆப்’ என்னும் சமூக ஊடகத்தில் பயன்படுத்தப்படுகிறது என்று கேரளத்தைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே. ராகேஷ் கூறினார். நாடாளுமன்றத்திலும் 2019-ஆம் ஆண்டேமுதன்முதலாக பிரச்சனையைக் கிளப்பினார். அதனை ஒட்டுமொத்தமாக மறுக்காத மோடி அரசு, மாறாகஅது ‘அதிகாரப்பூர்வ மற்ற கண்காணிப்பு’ (unauthorized surveillance) என்று கூறியது. ‘பெகாசஸ் ஸ்பைவேர்’ செயலி மூலம் 121 பேரின்வாட்ஸ் அப் எண்கள் வேவு பார்க்கப்பட்டிருக்கலாம் என அன்றைய ஒன் றிய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக இருந்த ரவி சங்கர் பிரசாத், மாநிலங்களவையில் பகிரங்கமாக ஒப்புக் கொள்ளவும் செய்தார்.

எனவே, ‘பெகாசஸ் ஸ்பைவேர்’மூலமான வேவு வேலை பற்றி மோடிஅரசுக்கு ஒன்றுமே தெரியாது; அதற்கு சம்பந்தமே இல்லை என்றுகூறுவதை எதிர்க்கட்சிகள் நம்பத் தயாரில்லை.அதனால் அவர்கள் மோடி அரசுக்கு அடுக்கடுக்கான பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.“பெகாசஸ் ஸ்பைவேரை உருவாக்கும் இஸ்ரேலின் என்.எஸ்.ஒ. நிறுவனம், தங்களின் ஸ்பைவேர் மென்பொருளை அரசாங்கம் மற்றும்அரசாங்க முகமைகளுக்கு மட்டுமே வழங்குகிறோம் என்று கூறியுள்ள நிலையில், ‘பெகாசஸ் ஸ்பைவேர்’ இந்தியாவிற்கு வந்தது எப்படி?” என்ற கேள்விக்கு மோடி அரசு பதிலளிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் கே.கே. ராகேஷ்மாநிலங்களவையில் வலியுறுத்தியுள்ளார்.
அதாவது, ஸ்பைவேரை இந்திய அரசு முகமை இந்தியாவிற்கு கொண்டு வந்ததா? அல்லது அரசாங்கமே நேரடியாக இந்த ஸ்பைவேரை வாங்கியதா? அல்லது வேறுஏதேனும் முகமைகள் மூலம் வாங்கியதா? என்ற கேள்வியை அவர் எழுப்பியுள்ளார்.“வாட்ஸ் ஆப் ஹேக்கைப் பொறுத்தவரை, மூன்று சாத்தியக் கூறுகள் மட்டுமே இருக்க முடியும்”என்று தெரிவித்துள்ள காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் திக்விஜய் சிங், “ஒன்று, அரசு நேரடியாகவே வேவு வேலையில் சட்டப்பூர்வமாக இறங்கியிருக்கலாம்; இரண்டாவது, சட்டத்திற்குப் புறம்பாக இதுஅரங்கேற அரசு அனுமதி அளித்திருக்கலாம் அல்லது அரசின் கவனத் திற்கு தெரியாமல் சட்டவிரோதமாக இது நடைபெற்றிருக்கலாம்” என்று கூறியுள்ளார். “அரசாங்கமும் இல்லை; அரசு நிறுவனங்களும் இல்லை, இஸ்ரேலின் என்.எஸ்.ஒ.குழுமமே நேரடியாக வேவு வேலைபார்த்தது? என்றால், இந்த பிரச்சனையை தீவிரமாக எடுத்துக் கொண்டிருக்க வேண்டாமா?” என்றும் திக் விஜய் சிங் கேட்டுள்ளார்.

ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் மனோஜ் குமார் ஜா, “பெகாசஸ் ஸ்பைவேர் விவகாரத்தைப் பார்க்கையில், இஸ்ரேலிய கண்காணிப்பு முறை மற்றும் இஸ்ரேலிய நிர்வாக முறை மீதான இந்திய அரசின் புதிய காதல் போல் தெரிகிறது”என்று கூறியுள்ளார்.“இந்திய குடிமக்களை உளவுபார்ப்பதற்காக அரசாங்க முகமைகளால் மட்டுமே பயன்படுத்தப்படும் இந்த ஸ்பைவேரை யார் வாங்கியது? என்ற விசாரணையை இந்தியஅரசு மேற்கொண்டதா? என்ற கேள்வியை திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் நதிமுல் ஹக்கூ எழுப்பியுள்ளார்.“பெகாசஸ் ஸ்பைவேர் பயன்பாட்டின் மூலம் தரவை இடைமறித்தல், கண்காணித்தல் அல்லது மறைகுறியாக்கலுக்கு அரசாங்கம் எந்த வகையில் அனுமதி அளித்தது?” என்றும் அவர் கேட்டுள்ளார்.ஒன்றிய பாஜக அரசை எதிர்க்கட்சி எம்.பி.க்கள்தான் கேள்விக்கணைகளால் துளைத்தெடுத்தார் கள் என்றால், சுற்றுச்சூழல், வன மற்றும் காலநிலை மாற்றம் மற்றும்தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சராக இருக்கும் பாஜகவின் பூபேந்தர் யாதவும், “21 தொலைபேசிகள் கருத்தியல் ரீதியாக வேறுபட்டதற்காக கண்காணிக்கப்பட்டதா?” என்ற கேள்வியை மிகவும் ‘அப்பாவி’யாக, ஒன் றிய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வனி வைஷ்ணவைப் பார்த்து எழுப்பியுள்ளார். மேலும் “இது ஒரு திட்டமிடப்பட்ட சதியா அல்லது தனியுரிமையின் உண்மையான பிரச்சனையா? என்பதை தெளிவுபடுத்த வேண்டும்”
என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

ஒட்டுமொத்தமாக அனைத்துக் கட்சி எம்.பி.க்களும் எழுப்பும் ஒற்றைக் கேள்வி, பெகாசஸ் ஸ்பைவேர் செயலியை, இஸ்ரேலிடமிருந்து இந்திய அரசு வாங்கியதா?இல்லையா? என்பதுதான். ஆனால், திருடனுக்கு தேள்கொட் டிய கதையாக அதற்கு பதிலளிக்க முடியாமல்தான் மோடி அரசு மாட்டிக்கொண்டு முழிக்கிறது.“எங்கள் பார்வை மிகவும் தெளிவாக உள்ளது. யாருக்கு புகார் வந்தாலும், அவர் வழக்குத் தாக்கல் செய்யலாம், ரூ .5 லட்சம் இழப்பீடு பெறலாம், குற்றம் சாட்டப்பட்டவர்களை சிறைக்கு அனுப்பலாம். இந்த விசாரணைக்கு ஒன்றிய அரசு முற்றிலும் ஒத்துழைக்கும்; ஆனால் எந்த வகையிலும் சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் விசாரணையில் இந்திய அரசாங்கம் ஈடுபடாது!” என்று உள்ளூர் அடிதடி பிரச்சனைக்காக காவல்நிலையத்தில் நடக்கும் கட்டப்பஞ்சாயத்து போல பேசியுள்ளார். தகவல் தொழில்நுட்பத் துறையின் முன்னாள் ஒன்றிய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்.

;