india

img

புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற மாட்டோம்... பாஜக ஒன்றிய அமைச்சர் தோமர் மீண்டும் ஆணவம்...

புதுதில்லி:
கார்ப்பரேட் நலன்களுக்காக மோடி அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து, நாடு முழுவதும் விவசாயிகள் போராடி வருகின்றனர். குறிப்பாக, தலைநகர் தில்லியின் எல்லையை முற்றுகையிட்டு, கடந்த 8 மாதங்களாக மழையிலும், வெயிலிலும் போராடிக் கொண்டிருக்கின்றனர். இதுவரை 350-க்கும் மேற்பட்டவர்கள் தங்களின் உயிரை இழந்து விட்டனர்.இந்நிலையில் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற முடியாது என்று ஒன்றிய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் ஆணவமாக கூறியுள்ளார்.

பிரதமர் மோடி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த தோமர், “ஒன்றிய அமைச்சரவையானது, நாட்டில் வேளாண் கட்டமைப்பை மேம்படுத்த ரூ.1 லட்சம் கோடி ஒதுக்க ஒப்புதல் அளித்துள்ளது. அதேநேரம் ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை ஒருபோதும் திரும்பப் பெற மாட்டோம்.   இதுதொடர்பாக போராடும் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த ஒன்றிய அரசு தயாராக உள்ளது; அவர்கள் பேச்சுவார்த்தை பாதைக்குத் திரும்ப வேண்டும்” என்று கூறியுள்ளார்.

;