india

img

வேளாண் சட்ட மோசடிகளை வீடு, வீடாக அம்பலப்படுத்துவோம்.... தேர்தல் நடக்கும் 5 மாநிலத்திலும் பாஜகவைத் தோற்கடிப்போம்.... தில்லி விவசாயிகள் சங்கத் தலைவர்கள் சூளுரை....

புதுதில்லி:
பெருமுதலாளிகளுக்கு ஆதரவாகவும், விவசாயிகள் மற்றும் நாட்டுமக்களை வஞ்சிக்கும் வகையிலும், வேளாண் சட்டங்களைக் கொண்டுவந்துள்ள பாஜகவை, சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களிலும் தோற்கடித்தே தீருவோம் என்று விவசாயிகள் சங்கத் தலைவர்கள் சூளுரைத்துள்ளனர்.

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்குவங்கம், அசாம் ஆகிய ஐந்துமாநிலங்களில், மார்ச் 27-இல் துவங்கிஏப்ரல் 29 வரை மொத்தம் 8 கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த மாநிலங் களில் “பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டாம்...” என வீடு, வீடாக சென்று விவசாயிகள் பிரச்சாரத்தில் ஈடுபடுவார்கள் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து பாரதிய கிஷான் யூனியன் தலைவர் பல்பீர் எஸ்.ராஜேவால்கூறுகையில், “தேர்தல் நடைபெறும்மேற்குவங்கம், கேரள மாநிலங் களுக்கு நாங்கள் குழுக்களை அனுப்புவோம். அங்கு எந்தவொரு கட்சியையும் நாங்கள் ஆதரிக்க மாட்டோம்;ஆனால், பாஜகவை தோற்கடிக்கும்வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு பிரச்சாரம் மேற்கொள்வோம். மோடிஅரசு எவ்வளவு மோசமாக விவசாயிகளை நடத்துகிறது? என்பது குறித்து மக்களிடம் தெரிவிப்போம்” என்று தெரிவித்துள்ளார்.

இதேபோல ‘ஸ்வராஜ் இந்தியா’விவசாய அமைப்பின் தலைவர்யோகேந்திர யாதவ், “விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டங்களைக் கொண்டுவந்த பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு வரும் சட்டமன்றத் தேர்தலில் நாங்கள் தகுந்த பாடத்தைப் புகட்டுவோம். தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் இதுகுறித்து மக்களிடம் பிரச்சாரம் மேற்கொள்வோம். ‘பாஜக-வை ஏன்,தண்டிக்க வேண்டும்..?’ என மக்களிடம் எடுத்துரைப்போம். வரும் மார்ச் 12 அன்று கொல்கத்தாவில் மிகப் பெரிய பொதுக்கூட்டத்தையும் நாங்கள்நடத்த இருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.போராடும் விவசாயிகள் தங்கள் போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள நிலையில், தனியார்மயமாக்கலுக்கு எதிராகப் போராடும் வர்த்தக சங்கங்களுடன் கைகோர்ப்பதெனவும் முடிவு செய்துள்ளனர். மார்ச் 15 அன்று நாடு முழுவதும் தனியார்மயமாக்கலுக்கு எதிராக வணிகர் சங்கங்கள் போராட்டம் நடத்தவுள்ள நிலையில், அந்த போராட்டத்தில் விவசாயிகளும் கலந்துகொள் வார்கள் என்று அறிவித்துள்ளனர்.

;