india

img

தொடர்ந்து போராடுவோம்... சிறைக்கு அஞ்சமாட்டோம்... சிஏஏ போராட்ட வழக்கில் ஜாமீன் பெற்ற மாணவர்கள் சூளுரை....

புதுதில்லி:
இஸ்லாமியர்களுக்கு எதிரான குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை ஒன்றிய பாஜக அரசு 2019-ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது.

இதற்கு எதிராக தில்லியில், இஸ்லாமியப் பெண்கள் மற்றும் மாணவர்கள் போராட்டம் நடத்தியபோது, சங்-பரிவாரங்கள் உள்ளே புகுந்து வன்முறையை கட்டவிழ்த்து விட்டன. 50 பேர் இந்த வன்முறையில் கொல்லப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்டவர்கள் மீதே மோடி அரசுவழக்கு பதிவு செய்தது. தேசத்துரோகம்,  பயங்கரவாத தடுப்பு உள்ளிட்ட சட்டப்பிரிவுகளில் அவர்களை சிறையில் அடைத்தது.இந்நிலையில், மோடி அரசால் கைது செய்யப்பட்டு, ஓராண்டுக்கும் மேலாக சிறையில்இருந்த வந்த ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகமாணவியர் நடாஷா நர்வால், தேவகனா கலிதா, ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர் ஆசிப் இக்பால் தன்ஹா ஆகியோர் அண்மையில், தங்களுக்கு ஜாமீன் கோரி தில்லி உயர் நீதிமன்றத்தை நாடினர். மனுவை விசாரித்த நீதிபதிகள், மாணவர்கள் மூவரையும் உடனடியாக விடுதலை செய்யுமாறு உத்தரவிட்டனர். 

முன்னதாக, “போராட்டம் நடத்தும் தார்மீக உரிமையை அரசியலமைப்புச் சட்டம்மக்களுக்கு வழங்கியுள்ளது. போராட்டத்துக்கும், பயங்கரவாத செயல்களுக்கும் இடையே ஒரு மெல்லியக் கோடு அளவுதான் வித்தியாசம். ‘ஊபா’ சட்டம் என்பது பயங்கரவாத செயல்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட சட்டம். சாதாரண குற்றச் செயல்களுக்கு எல்லாம் இந்த சட்டத்தை பயன்படுத்துவது சரியான போக்கு அல்ல!” என்று ஒன்றிய அரசு மீது தங்களின் விமர்சனத்தையும் முன்வைத்தனர்.இதனிடையே, மாணவர்கள் 3 பேரும் வியாழனன்று விடுதலையாகினர். பின்னர் அவர்கள் சிறைக்கு வெளியே செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர்.  அப்போது, “போராட்டம் நடத்துவது என்பது பயங்கரவாதம் அல்ல” என்று கூறியதற்காக, தில்லி உயர்நீதிமன்றத்திற்கு நன்றி தெரிவித்த அவர்கள், “எங்களின் விடுதலையை தாமதப்படுத்தியதானது, நீதிமன்றத்தின் தீர்ப்பால் ஒன்றிய அரசு விரக்தி அடைந்துள்ளதையே காட்டுகிறது; ஆனால், நாங்கள் அவர்களைக் கண்டெல்லாம் அஞ்சப்போவ தில்லை.  சிறையில்அடைப்போம் என்று அவர்களால் எங்களை அச்சுறுத்த முடியாது. அப்படி அவர்கள் எங்களை அச்சுறுத்தினால், அது எங்கள் போராட்ட வீரியத்தைத்தான் அதிகப்படுத்தும்” என்று தெரிவித்தனர்.

;