india

img

தனியார்மயத்திற்கு எதிராகக் கண்டனக் குரல்.... வங்கி ஊழியர்களுடன் கைகோர்த்த பொதுத்துறை ஊழியர்களும் விவசாயிகளும்...

புதுதில்லி:
வங்கி ஊழியர்களின் இரண்டு நாள் வேலைநிறுத்தம் தொடங்கிய திங்கள் அன்று, அவர்களுக்கு ஒருமைப்பாடு தெரிவித்ததுடன், இந்திய ரிசர்வ் வங்கி, பிஎஸ்என்எல் மற்றும் மத்தியத் தொழிற்சங்கங்களைச் சேர்ந்த தொழிலாளர்களும், சம்யுக்த கிசான் மோர்ச்சா-வின் கீழ் போராடிக்கொண்டிருக்கும் விவசாயிகளும் இணைந்து தனியார்மயத்திற்கு எதிராக கண்டன முழக்கம் மேற்கொண்டார்கள். நரேந்திர மோடி அரசாங்கத்தின் தனியார்மயத்தைக் கண்டித்து மத்தியத் தொழிற்சங்கங் களைச் சேர்ந்த தொழிலாளர்கள் எழுப்பியகண்டனக் குரல் நாடு முழுவதும் எதிரொலித்தது.

இவ்வாறு மத்தியத் தொழிற்சங்கங்களும், கடந்த நூறு நாட்களுக்கும் மேலாக ‘சம்யுக்தகிசான் மோர்ச்சா’ பதாகையின்கீழ் போராடிக்கொண்டிருக்கும் விவசாயிகளும் திங்கள் கிழமையை தனியார்மயத்திற்கு எதிரான தினமாகவும், கார்ப்பரேட்மயத்திற்கு எதிரான தினமாகவும் அனுசரித்தார்கள். மத்திய அரசின் தனியார்மய நடவடிக்கைகளுக்கு எதிராக, வங்கி ஊழியர்களுடன் இணைந்து ஒன்றுபட்டுத் தங்கள் எதிர்ப்பினைப் பதிவு செய்தார்கள்.  

இவ்வாறு இவர்கள் மேற்கொண்ட கிளர்ச்சிப் போராட்டங்கள் நாடு முழுவதும்ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட இடங்களில்நடைபெற்றது. விவசாயிகள் கிராமப்புறங் களில் இப்போராட்டங்களில் கலந்துகொண் டார்கள்.  நாட்டின் தலைநகரில், புதுதில்லி ரயில் நிலையத்தின்முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மத்தியத் தொழிற்சங்கங்களின் தலைவர்களும், தொழிலாளர்களும் கலந்து கொண்டார்கள்.வங்கி ஊழியர்கள் நடத்திய வேலைநிறுத்தப் போராட்டம் மகத்தான வெற்றி பெற்ற
தாக வங்கி ஊழியர் சங்கங்களின் ஐக்கிய அமைப்பு (United Forum of Bank Unions), அறிவித்துள்ளது.

போராடும் வங்கி ஊழியர்களுக்கு ஒருமைப்பாடு தெரிவித்து இந்திய ரிசர்வ் வங்கி ஊழியர்களும், பிஎஸ்என்எல் ஊழியர்களும் தங்கள் அலுவலகங்களுக்கு முன்னால் நின்று மதிய உணவு இடைவேளையில் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டார்கள்.தில்லி ரயில்நிலையத்தின்முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றிய அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் இணைச் செயலாளர் விஜு கிருஷ்ணன், விவசாயிகளும் தொழிலாளர்களும் மோடி அரசாங்கத்தின் தனியார்மயக் கொள்கைகளுக்கு எதிராகவும், ஒருசில கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவானகொள்கைகளுக்கு எதிராகவும் ஒன்று பட்டிருக்கிறார்கள் என்று கூறினார். (ந.நி.)

;