india

img

வாரணாசி நீதிமன்ற ஆணை சட்டத்தை மீறிய செயல்....

புதுதில்லி:
காசியில் உள்ள ஞானவாபிமசூதி தொடர்பாக வாரணாசி நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு, சட்டத்தை மீறியசெயலாகும் என்று மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளது.

இது தொடர்பாக கட்சியின்அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இந்தியத் தொல்லியல் ஆய்வகம், ஞானவாபி மசூதியைஆய்வு செய்து, அந்த இடத்தில்கோவில் இருந்ததா என ஆராய்ந்து கூறுமாறு வாரணாசியில் உள்ள சிவில் நீதிமன்றம்ஒன்று கோரியிருப்பது நடப்பில்உள்ள சட்டத்தை மீறும் செயலாகும். வழிபாட்டுத் தலங்கள்(சிறப்பு ஷரத்துக்கள்) சட்டமானது, நாட்டில் இப்போதுள்ள பல்வேறு மதத்தினரின் வழிபாட்டுத் தலங்களும்,எவ்விதமான மாற்றமுமின்றிஉள்ளது உள்ளபடி நிர்வகிக்கப்பட வேண்டும் என்று கட்டளையிட்டிருக்கிறது. இதற்குஎதிராக கீழமை நீதிமன்றம் மேற்கண்டவாறு கோரியிருக்கிறது. உயர் மட்டத்தில் உள்ள நீதித்துறை உடனடியாக தலையிட்டு, கீழமை நீதிமன்றத்தின் உத்தரவை ரத்துசெய்திட வேண்டும்.இவ்வாறு அரசியல் தலைமைக்குழு கோரியுள்ளது.  (ந.நி.) 

;