india

img

 தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு தடுப்பூசி ....

புதுதில்லி:
விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிக்கும் வகையில் மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ள  புதிய வேளாண்சட்டங்களை ரத்து செய்யக்கோரி தில்லி மாநில எல்லையில் பல்வேறு மாநில விவசாயிகள் 140 நாட்களுக்கும் மேலாக தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

 ஹரியானாவின் குர்கிராம், பரிதாபாத், சோனிபட் ஆகிய மாவட்டங்களில் சுமார் 42 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் ஹரியானா சுகாதாரத்துறை அமைச்சர் அனில் விஜ்  கூறுகையில், தில்லி - ஹரியானாஎல்லைகளில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் பற்றி கவலைப்படுகிறேன். ஹரியானாவில் உள்ள ஒவ்வொருவர் குறித்தும் கவலையும் அக்கறையும் கொள்வது எனது கடமை. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யவேண்டும். மாநில அரசு அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யும். விவசாயிகளுக்கு கொரோனா தடுப்பூசியும் போட ஹரியானா அரசு முடிவு செய்துள்ளது என்றார்.

;