india

img

தடுப்பூசி உபகரண ஏற்றுமதி தடையை அமெ. நீக்க வேண்டும்....

புதுதில்லி:
கோவிட் 19 கொரோனா வைரஸ் தொற்று  தொடர்பான தடுப்பூசி தயாரிப்பதற்குத் தேவைப்படும் உபகரணங்களில் பல அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்ய வேண்டிய நிலையில் இந்தியா இருக்கிறது. இதற்கு அமெரிக்கா தடை விதித்திருக்கிறது. இதனை அமெரிக்கா நீக்கிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொடர் பான தடுப்பூசிகளை உற்பத்தி செய்வதற்குத் தேவைப்படும் பல்வேறு துணைப் பொருட்களின் பற்றாக்குறையால் தேவையான அளவிற்கு தடுப்பூசிகள் உற்பத்தி செய்யப்படுவதில் முட்டுக் கட்டை ஏற்பட்டிருக்கிறது. இத்தகைய துணைப் பொருள்களில் பிளாஸ்டிக் பைகள், வடிப்பான்கள் (filters), தீர்வுகள் (solutions) போன்று பல பொருட்கள் அமெரிக்காவிலிருந்துதான் வர வேண்டியிருக்கிறது. ஆனால், அமெரிக்க நிர்வாகம் இப்பொருள்களைத் தங்கள் நாட்டிலிருந்து ஏற்றுமதி செய்வதற்கு, பாதுகாப்பு உற்பத்திச் சட்டத்தின் கீழ் தடை விதித்திருக்கிறது. இந்தியாவின் தரப்பில் பலமுறை கேட்கப் பட்டுள்ள போதிலும் இவற்றை ஏற்றுமதி செய்வதற்கு, தங்கள் நிலைப்பாட்டிலிருந்து தளர்வினையோ அல்லது விலக்கினையோ அமெரிக்கா ஏற்படுத்திடவில்லை.   நம் நாட்டில் தடுப்பூசியை மிகப்பெரிய அளவில் உற்பத்தி செய்துவரும் சீரம் இன்ஸ்டிட்யூட்,இது தொடர்பாக அரசின் கவனத்திற்குக் கொண்டு வந்திருக்கிறது.

எனினும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நிர்வாகம் உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசுகிறது. சென்ற மாதம் மார்ச் 12 அன்று நடைபெற்ற நான்கு நாடுகளின் உச்சிமாநாட்டின்போது (Quad Summit), நான்கு நாடுகளின் சார்பாக வெளியிடப்பட்ட கூட்டு அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: “நாங்கள். அனைவருக்கும் சமமான அளவில்தடுப்பூசிகள் சென்றடைவதற்கும், அதன்மூலம்பொருளாதார நிலையினை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதற்கும், உலக அளவில் சுகாதாரத்திற்குப்பயன்அளிக்கக்கூடிய விதத்தில் தடுப்பூசிஉற்பத்தியை மிகவும் பாதுகாப்பாகவும், அனைவரும் வாங்கக்கூடிய விதத்தில் மலிவாகவும், அதேசமயத்தில் வலுவானவைகளாகவும் விரிவாக்குவதற்காக செயல்படும் சக்திகளுடன் இணைந்துகொள்வோம்.” மேலும், அமெரிக்கா இந்திய நிறுவனமான பயலாஜிகல் இ லிமிடெட் (Biological E Ltd) என்னும் நிறுவனம் தடுப்பூசிகளை உற்பத்தி செய்வதற்கு நிதி உதவி அளிப்பதாகவும் இதன்மூலம் இந்தியா, இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் தடுப்பூசி உற்பத்தி மையமாக மாறுவதற்கு உதவுவதாகவும் உறுதி அளித்திருக்கிறது.

ஆனால் அமெரிக்கா, தடுப்பூசிக்குத் தேவையான துணைப் பொருள்களை ஏற்றுமதி செய்வதற்கு ஏற்படுத்தியுள்ள தடை மேலே குறிப் பிட்டுள்ள குறிக்கோள்கள் அனைத்திற்கும் முற்றிலும் எதிரானவைகளாகும். நான்கு நாடுகள் கூட்டணியில் மிகப்பெரிய அளவில் அங்கம் வகிக்கும் மோடி அரசாங்கம், பைடன்அரசாங்கம் தான் கூறியுள்ள வார்த்தைகளுக்கு உண்மையாக இருந்து, தடுப்பூசிகளுக்கான துணைப் பொருள்களை இந்தியாவிற்கு அனுப்பப்படுவதை உடனடியாக உத்தரவாதப்படுத்திட வேண்டும். கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்று முன்னெப்போதும் இல்லாதஅளவிற்கு வேகமாகப் பரவிக்கொண்டிருக் கக்கூடிய நிலையில் தடுப்பூசிப் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ள இந்தியாவிற்கு குறைந்தபட்சம் இதனைச் செய்திட வேண்டும்.  இவ்வாறு அதில்  குறிப்பிட்டுள்ளது.

;