india

img

ஆண்டுக்கு இரு முறை நீட் தேர்வு நடத்த திட்டம்?

புதுதில்லி:
நீட் தேர்வை ஆண்டுக்கு இரு முறை நடத்தலாமா என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்துக்கு, தேசிய தேர்வு முகமை கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.மருத்துவப் படிப்பிற்கு நீட் தேர்வு நடத்துவதை ரத்து செய்ய வேண்டும் என தமிழகம் உள்பட சில மாநிலங்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. எனினும் இந்தாண்டு கொரோனா அச்சுறுத்தலுக்கும் மத்தியில் நீட் தேர்வு நடைபெற்றது.

இந்த சூழலில் நீட் தேர்வை ஆண்டுக்கு இரண்டு முறை நடத்துவது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகத்துக்கு தேசிய தேர்வு முகமை கடிதம் எழுதியுள்ளது. மாணவர்களின் மனஅழுத்தத்தை போக்க நீட் தேர்வை 2 முறை நடத்த தேசிய தேர்வுகள் முகமை திட்டமிட்டுள்ளதாக தகவல் கூறப்படுகிறது.மேலும், ஆன்லைன் மூலம் நீட் தேர்வை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் அதில்கூறப்பட்டுள்ளது. இதற்கு ஒப்புதல் கிடைக்கும் பட்சத்தில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

;