india

img

நிலக்கரி ஊழல் குற்றவாளிகளை தப்பவிட முயற்சி? 2 ஆண்டுகளாகியும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை....

புதுதில்லி:
நிலக்கரி ஊழல் குற்றச்சாட்டில் தொடர்புடைய 3 அதிகாரிகள் மீது 2 ஆண்டுகளுக்கும் மேலாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமல் சிபிஐ அதிகாரிகள் தாமதம் காட்டிவருவதாகவும், இதன் பின்னணியில் மத்திய பாஜக அமைச்சர் களின் அழுத்தம் இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

வாஜ்பாய் தலைமையிலான மத்திய பாஜக ஆட்சியின்போது, 2008-ஆம் ஆண்டு- உத்தரப்பிரதேச மாநிலம் பதேபூர் நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் ஊழல் நடந்ததாக புகார் எழுந்தது. இதுதொடர் பாக பிரகாஷ் இண்டஸ்டிரிஸ் என் னும் நிறுவனத்தின் மீது 2014-ஆம்ஆண்டு குற்றம் சாட்டப்பட்டு வழக் கும் பதிவு செய்யப்பட்டது. ஆனால், மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சிக்கு வந்த பின்னணியில், அடுத்த இரண்டாண்டுகளிலேயே- அதாவது கடந்த 2016ஆம் ஆண்டு, பிரகாஷ் இண்டஸ் டிரிஸ் நிறுவனத்தின் மீதான குற்றச்சாட்டுக்களுக்கு எவ்வித சாட்சியங்களும் இல்லை என்று சிபிஐ அமைப்பு வழக்கை முடித்துக் கொண்டது. இது அப்போதே சர்ச்சையைக் கிளப்பியது.

ஏனெனில், நிலக்கரி ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த பிரகாஷ் இண்டஸ்டிரிஸ் நிறுவனத்தின் இயக்குநர்களே- மத்தியஅமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் மற்றும் மூத்த பாஜக தலைவர் களான ஹன்ஸ் ராஜ் ஆகிர் மற்றும் புபேந்தர் யாதவ் ஆகியோர்தான். இவர்கள் மீதுதான் வழக்கும் பதிவு செய்யப்பட்டிருந்தது. எனவே, அவர்களை தப்பவிடும் வகையிலேயே சிபிஐ தனது வழக்கை முடித்துக் கொண்டதாக விமர்சனங்கள் எழுந்தன.இதனிடையே, நிலக்கரி ஒதுக் கீட்டுக்கு பொறுப்பாக இருந்த ஐஏஎஸ் அதிகாரிகள் எச்.சி. குப்தா, கே.எஸ். கிரோபா மற்றும் கே.சி. சாமாரியா ஆகியோர் மீது மட்டும் வழக்கைத் தொடர்வது என்றும், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதென்றும் கடந்த 2018-ஆம் ஆண்டு திடீர் முடிவுக்கு சிபிஐ வந்தது. ஆனாலும், இவ்வாறு முடிவெடுத்து, இரண்டாண்டுகளுக்கு மேலாகியும் தற்போதுவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை. இவர்களில் குப்தா மற் றும் கிரோபா ஆகியோர் பணி ஓய்வும் பெற்றுவிட்டனர்.

இந்நிலையில், நிலக்கரி ஊழல்வழக்கில் ஐஏஎஸ் அதிகாரிகள் எச்.சி. குப்தா, கே.எஸ். கிரோபா மற்றும்கே.சி. சாமாரியா ஆகியோர் மீதுகுற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கு மத்திய அரசு இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.அதிகாரிகள் மீதான வழக்கை நடத்தினால், ஏற்கெனவே இந்த வழக்கிலிருந்து விடுபட்டு விட்ட தங்களுக்கும் சிக்கல் வரலாம் என்று, மத்தியில் உள்ள சில பாஜக அமைச்சர்களும், தலைவர்களும் அஞ்சுவதாகவும், அதனால் குற்றப்பத்திரிகை தாக்கல் ஆவதை மறைமுகமாக அழுத்தம் கொடுத்து தடுத்து வருவதாகவும் பெயர் தெரிவிக்க விரும்பாத சிபிஐ அதிகாரிகள்கூறினார்கள் என்று ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

;