india

img

மாநிலங்களுக்கு 16 கோடி தடுப்பூசிகள் வழங்கல்...

புதுதில்லி:
மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் இதுவரை சுமார் 16 கோடி தடுப்பூசிகளை மத்திய அரசு இலவசமாக வழங்கியுள்ளது.நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தடுப்பூசி போடும் பணியும் நடைபெற்று வருகிறது.

மத்திய அரசு இதுவரைசுமார் 16 கோடி (15,95,96,140)தடுப்பூசிகளை மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங் களுக்கும் இலவசமாக வழங்கியுள்ளது. இவற்றில் வீணான டோஸ்கள் உட்படமொத்தம் 14 கோடியே 89 லட்சத்து 76 ஆயிரத்து 248 டோஸ்கள் போடப்பட்டுள்ளன.ஒரு கோடிக்கும் மேலான (1,06,19,892) கோவிட் தடுப்பூசி டோஸ்கள், மாநிலங்கள்மற்றும் யூனியன் பிரதேசங்களிடம் கையிருப்பில் உள்ளன.மேலும் 57 லட்சம் டோஸ்கள் (57,70,000) அடுத்த மூன்று நாட்களில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு கூடுதலாக வழங்கப்படும்.மகாராஷ்டிராவில் தடுப் பூசிகள் தீர்ந்துவிட்டதாகவும் இதனால் அம்மாநிலத்தில் தடுப்பூசி போடும் திட்டம்பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பதாக அம்மாநில அரசு அதிகாரிகள் தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

;