india

தமிழகத்துக்கு ரூ.183.67 கோடி விடுவிப்பு....

புதுதில்லி:
தமிழ்நாடு உள்பட 17 மாநிலங்களுக்கு 6-வது தவணையாக ரூ.9,871 கோடி வருவாய்ப் பற்றாக்குறை நிதியை ஒன்றிய நிதியமைச்சகம் வியாழக்கிழமையன்று விடுவித்தது.

வருவாயை விட செலவினம் அதிகமாக உள்ள மாநிலங்களுக்கு வருவாய்ப் பற்றாக்குறை நிதியை வழங்குவதற்கு ஒன்றிய நிதிக் குழு பரிந்துரைக்கும். இதன்படி, 15-வது நிதிக் குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில் தகுதிவாய்ந்த 17 மாநிலங்களுக்கு ஒன்றிய  அரசு வருவாய் பற்றாக்குறை நிதியை மாதந்தோறும் ஒவ்வொரு தவணை களாக விடுவிக்கிறது. இதில்  ஆறாவது தவணையாக தமிழகம் உள்பட 17 மாநிலங்களுக்கு ரூ.9,871 கோடியை வருவாய்ப் பற்றாக்குறை நிதியாக  நிதிஅமைச்சகம் செப்டம்பர் 9 வியாழக்கிழமை யன்று விடுவித்துள்ளது. இதில் தமிழகத்துக்கு 6 வது தவணையாக ரூ. 183.67 கோடி  விடுவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 12 தவணைகளில் மொத்தத் தொகையும் விடுவிக்கப் படும் என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

;