india

img

ரயில் சேவைகளை நிறுத்தும்படி மாநில அரசுகள் கூறவில்லை.... ரயில்வே வாரியம் விளக்கம்.....

புதுதில்லி:
நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ள நிலையில், ரயில்சேவைகளை நிறுத்தி வைக்கும்படி, ரயில்வே நிர்வாகத்திடம் மாநில அரசுகள் கோரிக்கை வைக்கவில்லை என்று ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.

‍இதுதொடர்பாக, ரயில்வே வாரிய தலைவர் சுனீத் சர்மாசெய்தியாளர்களிடம் கூறியதாவது: அனைத்து ரயில் நிலையங்களிலும், பயணிகளுக்கு உடல் வெப்பப் பரிசோதனை செய்யப்படுகின்றன. நாடு முழுவதும் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றாதவர்களுக்கு அபராதம்விதிக்கப்படுகிறது. ரயில்நிலையங்களில் கூட்டம் கூடுவதை தவிர்ப்பதற்காக, பல ரயில் நிலைய நடைமேடை சீட்டுகளுக்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளன.

கொரோனா சிகிச்சைக்கு 4 ஆயிரம் ரயில் பெட்டிகள்
கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக, 4 ஆயிரம் ரயில் பெட்டிகள் நாடு முழுவதும் தயார் நிலையில் உள்ளன. தேவைப்படும் மாநிலங்களிலிருந்து கூடுதல் ரயில்களை இயக்க, மண்டலபொது மேலாளர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.ரயில் சேவைகளில் பற்றாக்குறை எதுவும் இல்லை என்பதை உறுதியாக கூற முடியும். நாட்டில், 70 சதவீதரயில் சேவைகள் இயங்கத் துவங்கியுள்ளன. அதிகளவில்பயணிகள்  வருகையை சமாளிக்க, கூடுதலாக, 140 ரயில்கள் இயக்கப்படுகின்றன.கொரோனா பரவல் அதிகரித்துள்ளதை அடுத்து, குறிப்பிட்ட மாநிலங்களில் இருந்து, தங்களுக்கு ரயில்சேவைகளை ரத்து செய்யும்படி, எந்த மாநில அரசும் இதுவரை கோரிக்கை வைக்கவில்லை. ரயில் பயணங்களின்போது, தொற்று பரிசோதனை செய்துகொள்ள வேண்டுமா? தொற்று இல்லை என்ற சான்றிதழ் வைத்திருக்க வேண்டுமா? என்ற தகவல்கள், ஐஆர்சிடிசி இணைய தளங்களில் விளக்கமாக விவரிக்கப்பட்டுள்ளன.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

;