india

img

கடும் குளிரில் போராட்டம் நடத்துவோரை கேலி பேசும் பிரதமர்.... கே.கே.ராகேஷ் சாடல்...

புதுதில்லி:
ஒரு புதிய வகை போராளிகள் நாட்டிற்குள் நுழைந்துவிட்டனர் என்று விவசாயிகள் போராட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி கேலி செய்திருப்பதற்கு, அகில இந்திய விவசாயிகள் சங்க இணைச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கே.கே. ராகேஷ் தனது முகநூல் பக்கத்தில் பதிலடி கொடுத்துள்ளார்.

“ஏகாதிபத்திய, கார்ப்பரேட்டுகளின் ‘ரசிகர்கள்’ போராட்டங்களை மதிக்க மாட்டார்கள்தான்..” என்று பிரதமரை, ராகேஷ் சாடியுள்ளார்.உழைத்து வாழ்வதற்கான உரிமைக்குக் கூட - இரண்டரை மாதங்களாக உறைபனி குளிரில் போராட வேண்டிய நிலையில் இருக்கும் இந்த நாட்டின் விவசாயிகளை பிரதமர் கேலி செய்கிறார். இன்னும் கொஞ்சம் பின்னோக்கிச் சென்றால், இதே போர்க்குணமிக்க உயிரினங்களை, பிரதமர் அதிகம் காணலாம். தேபாகா, தெலுங்கானா, புன்னப்புரா- வயலார் என இந்திய கிராமங்களில், சுதந்திரத்திற்கு முன்னும் பின்னும் மனிதர்களாகிய அவர்கள் வாழ்வதற்கான உரிமைக்காக தொடர்ந்து போராடுகிறார்கள். அதற்காக தங்களை வலுப்படுத்துகிறார்கள். மாறாக, உரிமைப் போராட்டங்களை அரியாசனங்களில் இருப்பவர்கள் எப்போதும் வெறுக்கிறார்கள். போராடும் விவசாயிகளை எதிரி இராணுவம் போல நடத்துகிறார்கள். ஆனால், ‘போராட்டங்களே உலகை மாற்றியுள்ளன’ என்று ராகேஷ் தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.

;