india

img

தீக்கதிர் விரைவுச் செய்திகள்

தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்பு முறை மன்ற நடுவராக முன்னாள்மாநில தேர்தல் ஆணையர் மாலிக்பெரோஸ் கான் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் அடுத்த  மூன்று ஆண்டுகளுக்கு பணியில் இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

                                                            ***************

தமிழகம் உட்பட 5 மாநில தேர்தல்களில் வெளிநாடுவாழ் இந்தியர்கள் தபால்மூலம் வாக்களிக்க வெளியுறவுத்துறை ஒப்புதல் அளித்துள் து.

                                                            ***************

மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையாக 6 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

                                                            ***************

ஈரோட்டில் இருந்து சேலம் வழியாக சென்னைக்கு செல்லும் ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில் ஜனவரி 10ஆம் தேதி முதல் மீண்டும் இயக்கப்பட உள்ளது.

                                                            ***************

சென்னை விமான நிலையத்தில் கடந்த 9 மாதங்களில் ரூ.3 கோடி மதிப்புள்ள போதை பொருட்களை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

                                                            ***************

பெட்ரோல் விலை லிட்டருக்கு 86.51 ரூபாய், டீசல் லிட்டருக்கு 79.21 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

                                                            ***************

நாட்டின் சர்க்கரை உற்பத்தி அக்டோபர்-டிசம்பர் காலகட்டத்தில் 110.22 லட்சம் டன்னாக இருந்தது என்று இந்திய சர்க்கரை ஆலைகள் கூட்டமைப்பு (இஸ்மா) தெரிவித்துள்ளது.

                                                            ***************

இமாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் 3.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என்று தேசிய புவியதிர்வு மையம் தெரிவித்துள்ளது. சம்பா மாவட்டத்தில் நண்பகல் 01.09மணிக்கு நிலநடுக்கம் உணரப்பட்ட தாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

                                                            ***************

கோழி, வாத்துக்களுக்கு பரவி வரும் பறவைக் காய்ச்சலை கேரள அரசு மாநில பேரிடராக அறிவித்துள்ளது.

                                                            ***************

இங்கிலாந்து நாட்டில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருகிறது.  இதனால் தேசிய அளவிலான ஊரடங்கை அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார். ஸ்காட்லாந்தும்  ஊரடங்கை அறிவித்துள்ளது. 

;