india

img

தீக்கதிர் விரைவுச் செய்திகள்

டிஎன்பிஎஸ்சி குரூப்-1 முதல் நிலைத் தேர்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாநிலம் முழுவதும் நடைபெறுகிறது. 66 காலியிடங்களுக்காக நடத்தப்படும் இத்தேர்வில் மாணவிகளே அதிகம் விண்ணப்பித்துள்ளனர்.

                                 ***************

திருவண்ணாமலையில் ராணுவத்திற்கு ஆள் சேர்க்கும் முகாம் பிப்ரவரி 10 ஆம் தேதி தொடங்கி 17 நாட்கள் நடைபெறுகிறது.

                                 ***************

இந்திய பங்குச்சந்தைகள் ஒழுங்குமுறை வாரியம், தொழில் அதிபர்முகேஷ் அம்பானிக்கு ரூ.15 கோடி அபராதம் விதித்துள்ளது.

                                 ***************

பிளஸ்- 1, பிளஸ்- 2 பயிலும்அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இணைய வழியில் வழங்கப்படவுள்ள ஜேஇஇ நுழைவுத் தேர்வுக்கான இலவசப் பயிற்சிக்கு இதுவரை 6 ஆயிரம் மாணவர்கள் பதிவு செய்துள்ளனர்.

                                 ***************

தமிழகத்தில் இளநிலை யோகாமற்றும் இயற்கை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு வருகின்ற 7 ஆம் தேதி தொடங்குகிறது.

                                 ***************

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.86.51, ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.79.21-ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

                                 ***************

ஒடிசா மாநிலம் சம்பல்பூரில் உள்ளஇந்திய மேலாண்மை நிறுவனத்தின் (ஐஐஎம்) நிரந்தர வளாகத்திற்கு காணொலி மூலம் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

                                 ***************

இந்தியாவில் இருந்து பிரிட்டனுக்கு ஜனவரி 6 ஆம் தேதி முதலும்  பிரிட்டனில் இருந்து இந்தியாவிற்கு  8 ஆம் தேதி முதலும் விமான சேவை தொடங்கப்படும் என மத்திய விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

                                 ***************

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் 11-வது பட்டமளிப்பு விழா பிப்ரவரியில் நடைபெறவுள்ளது.  பட்டம் பெறுவதற்குத் தகுதியான மாணவர்கள் ஜனவரி 18 வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

;